லண்டனில் ஒரு கோடி ரூபாய்க்கு ஏலம் போன மகாத்மாவின் ‘ராட்டை’
லண்டன்: லண்டனில், காந்திஜி பயன் படுத்திய ராட்டை சுமார் ஒரு கோடி ரூபாய்க்கு ஏலம் போயுள்ளது.
இந்தியாவின் சுதந்திரத்திற்காக அஹிம்சா வழியில் போராடிய மகாத்மா காந்தி, பொதுவாக தனது ஆடைகளுக்கான துணியை தானே சொந்த ராட்டையில் தாமாகவே நூலாக திரித்து பின் துணியாக நெய்து, தைத்து உடுத்துவது வழக்கம்.
சுதந்திரப் போராட்ட காலத்தில் சிறையில் தனது நேரத்தை எல்லாம் நூல் நூற்பதற்கும், புத்தகங்கள் படிப்பதற்குமாகவே பயன் படுத்தினார் தேசப்பிதா.
காந்திஜி பயன் படுத்திய பொருட்களை எல்லாம் ஏலத்தில் விட்டு அதிக பணம் சம்பாதித்துள்ளது லண்டன் ஏல நிறுவனம்.

ஏலம்.....
வெள்ளையர் ஆட்சி காலத்தின் போது புனே நகரில் உள்ள எர்வாடா சிறையில் காந்தி அடைக்கப்பட்டிருந்த போது அவர் பயன்படுத்திய மடிக்கக்கூடிய ராட்டையை லண்டனில் உள்ள முல்லாக் ஏல நிறுவனம் நேற்று ஏலத்தில் விட்டது.

60 ஆயிரம் பவுண்ட்....
ராட்டைக்கான குறைந்தபட்ச ஏலத்தொகை என 60 ஆயிரம் பவுண்ட்களை முல்லாக் ஏல நிறுவனம் அறிவித்திருந்தது.

இருமடங்கு தொகை....
ஆனால், எதிர்பார்த்ததை விட இருமடங்கு அதிகமாக ஒரு லட்சத்து 10 ஆயிரம் பவுண்டுகளுக்கு, அதாவது இந்திய மதிப்பில் சுமார் 1 கோடியே 8 லட்சத்து 99 ஆயிரத்து 878 ரூபாய்க்கு ஏலம் போனது அந்த ராட்டை .

அன்பளிப்பு....
வெள்ளையர் ஆட்சியின்போது அடிமைப்பட்டிருந்த இந்தியாவில் மக்களின் நலனுக்காக பாடுபட்ட அமெரிக்க பாதிரியார் ரெவரெண்ட் ஃப்லாயிட் ஏ பஃபர் என்பவருக்கு மகாத்மா இந்த ராட்டையை அன்பளிப்பாக வழங்கி இருந்தது குறிப்பிடத்தக்கது.

பழங்காலப் பொருட்கள்....
ராட்டையுடன் காந்தி தன் கைப்பட எழுதிய இறுதி உயில், கடிதங்கள், புகைப்படங்கள், புத்தகங்கள் என அவரது வாழ்க்கையோடு தொடர்புடைய 60 பழங்கால பொருட்களும் ஏலம் விடப்பட்டன.

இறுதி உயில்....
இதில், காந்தியின் இறுதி உயில் மட்டும் 20 ஆயிரம் பவுண்டுகளுக்கு ஏலம் போனது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications