மலேசியன் ஏர்லைன்ஸின் 'அல்டிமேட் பக்கெட் லிஸ்ட்' போட்டி: திட்டித் தீர்த்த மக்கள்
கோலாலம்பூர்: ஆன்லைன் போட்டி ஒன்றுக்கு வைத்த பெயரை மலேசியன் ஏர்லைன்ஸ் நிறுவனம் மாற்றியுள்ளது.
மலேசியன் ஏர்லைன்ஸ் நிறுவன விமானம் எம்.ஹெச். 370 கடந்த மார்ச் மாதம் 8ம் தேதி மாயமானது. அதன் பிறகு கடந்த ஜூலை மாதம் 17ம் தேதி மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் எம்.ஹெச். 17 உக்ரைனில் ஏவுகணை வீசித் தாக்கப்பட்டதில் அதில் இருந்த 298 பேர் பலியாகினர்.
இந்த சம்பவங்களை அடுத்து மலேசியன் ஏர்லைனிஸின் வியாபாரம் பாதிக்கப்பட்டது.

போட்டி
தனது வியாபாரத்தை பெருக்க மலேசியன் ஏர்லைன்ஸ் ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்தைச் சேர்ந்தவர்களுக்காக ஒரு ஆன்லைன் போட்டியை அறிவித்தது.

பக்கெட் லிஸ்ட்
பக்கெட் லிஸ்ட் என்றால் ஒருவர் தான் வாழ்நாளில் செய்ய, பார்க்க விரும்புவது ஆகும். இந்நிலையில் மலேசியன் ஏர்லைன்ஸ் தான் அறிவித்த போட்டிக்கு என்னுடைய இறுதியான பக்கெட் லிஸ்ட் என்று பெயரிட்டது. இந்த போட்டியில் வெற்றி பெறும் 16 பேருக்கு ஐபேட் அல்லது மலேசியாவுக்கு திரும்பி வரும் டிக்கெட் அளிக்கப்படும் என்று அறிவித்தது.

திட்டு
மலேசியன் ஏர்லைன்ஸ் போட்டியின் தலைப்பை பார்த்த பலர் இப்படியா கொஞ்சம் கூட பொறுப்பில்லாமல் தலைப்பு வைப்பது என்று திட்டித் தீ்ர்த்தனர்.

நீக்கம்
பலரும் திட்டியதை அடுத்து பக்கெட் லிஸ்ட் போட்டி லிங்க் மலேசியன் ஏர்லைன்ஸ் இணையதளத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. ஆனால் அதற்கு பதிலாக நீங்கள் செய்ய விரும்பும் பட்டியலை தெரிவியுங்கள் என்று கூறப்பட்டுள்ளது.

வேலை
வியாபாரம் மந்தமாகிவிட்ட நிலையில் மலேசியன் ஏர்லைன்ஸ் தனது ஊழியர்களில் 30 சதவீதம் பேரை வீட்டுக்கு அனுப்ப முடிவு செய்துள்ளது.
-
அமெரிக்காவை அசரடித்த அம்பானி.. ரூ.27 லட்சம் கோடி முதலீடு செய்யும் ரிலையன்ஸ்.. டிரம்ப் அறிவிப்பு -
எங்க கொண்டு போய் விட்டுடுச்சி பாருங்க.. கேஸ் தட்டுப்பாட்டால், ஸ்விக்கி, ஜொமோட்டோ டெலிவரி குறைந்தது! -
7 பொதுத்தொகுதி + 2 தனித்தொகுதி.. அதிமுக கூட்டணியில் டிடிவிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் இதுதான்! -
அமெரிக்கா இனி பிக்பாஸ் இல்லை.. நீங்க நம்பலைனாலும் அதான் நெசம்.. ஐக்கிய அரபு சகாப்தமும் வீழ்ந்தது! -
பிரேமலதாவிற்கு திமுகவின் அடுத்த ‘சர்ப்ரைஸ்'.. தேமுதிகவிற்கு தாராளம் காட்டும் ஸ்டாலின்.. காங்கிரஸ்க்கு அடி -
3 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய்யை வாங்கி குவித்த இந்திய நிறுவனங்கள்! ரஷ்யாவுக்கு கொட்டும் பண மழை! -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
கடலில் இறக்கப்பட்ட கண்ணி வெடி! எக்குத்தப்பாய் வந்து சிக்கிய அமெரிக்கா! வால் ஸ்ட்ரீட் ஜர்னல் வார்னிங் -
ஒருவேளை உண்மையா இருக்குமோ.. என்டிஏ கூட்டணியில் விஜய்! மாஜி அமைச்சர் கடம்பூர் ராஜூ சொன்ன வார்த்தை! -
துணை முதல்வர் எல்லாம் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் வேலை.. 2.5 வருஷம் முதல்வர் பதவி.. பாஜகவிடம் விஜய் டிமாண்ட் -
தமிழகத்தில் மீண்டும் ஆட்சியை பிடிக்கும் ஸ்டாலின்! 2-வது இடம் யாருக்கு? வெளியான புதிய கருத்துக்கணிப்பு -
சிறகடிக்க ஆசை: முத்து மீனாவுக்கு நடந்த நல்ல விஷயம்! விஜயாவுக்கு இனி தான் பிரச்சனை! ரோகிணியின் அடுத்த பிளான்












Click it and Unblock the Notifications