ஊழல்.. மலேசிய முன்னாள் பிரதமர் நஜீப் ரஸாக்கிற்கு 12 ஆண்டு சிறை தண்டனை: உச்ச நீதிமன்றம் அதிரடி
கோலாலம்பூர்: பல கோடி ஊழல் முறைகேட்டில் சிக்கிய மலேசிய முன்னாள் பிரதமர் நஜீப் ரஸாக்குக்கு விதிக்கப்பட்ட 12 ஆண்டுகள் சிறைத் தண்டனையை அந்நாட்டு உச்ச நீதிமன்றம் உறுதி செய்தது.
மலேசிய பிரதமராக கடந்த 2009 முதல் 2018-ம் ஆண்டு மே மாதம் வரை பதவி வகித்தவர் நஜீப் ரஸாக் (69). தனது ஆட்சிக்காலத்தின் போது நாட்டில் தொழில் வளர்ச்சியை பெருக்குவதற்காகவும், அந்நிய நேரடி முதலீடுகளை கவர்வதற்காகவும் '1 மலேசியா மேம்பாட்டு நிறுவனம்' (1எம்டிபி) என்ற அமைப்பை நஜீப் ரஸாக் தொடங்கினார். அரசுக்கு சொந்தமான அந்த நிறுவனத்தின் நிர்வாகத்தையும் அவரே கவனித்து வந்தார். இந்நிலையில், 1எம்டிபி நிறுவனத்துக்கு செலுத்தப்பட்ட பல கோடி மலேசிய ரிங்கிட், பிரதமர் நஜீபின் சொந்த வங்கிக் கணக்குக்கு மாற்றப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இந்த விவகாரம் மலேசியாவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த முறைகேட்டில் தனக்கு தொடர்பு இல்லை என நஜீப் மறுத்து வந்தார். எனினும், அவரை பதவி விலகக் கோரி எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வந்தன. இந்த சூழலில் 2018 மே மாதம் நடந்த பொதுத் தேர்தலில் மகாதிர் முகமது புதிய பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இதன் தொடர்ச்சியாக, 1எம்டிபி முறைகேடு தொடர்பான விசாரணை சூடுபிடித்தது. இதில் முறைகேட்டில் நஜீப் ஈடுபட்டதற்கான ஆதாரம் இருந்ததாக புலனாய்வு அமைப்புகள் தெரிவித்தன. மேலும், 10 மில்லியன் டாலரை எஸ்ஆர்சி நிறுவனத்திடம் இருந்து சட்டவிரோதமாக நஜீப் பெற்றதற்குமான ஆதாரங்களை புலனாய்வு அமைப்புகள் கைப்பற்றின. இதனால் அதே ஆண்டு ஜூலை மாதம் நஜீப் ரஸாக் கைது செய்யப்பட்டார்.
இந்த வழக்கை விசாரித்த கீழமை நீதிமன்றம், நஜீப் ரஸாக்குக்கு 12 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், 210 மில்லியன் ரிங்கிட் (சுமார் ரூ.370 கோடி) அபராதம் விதித்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் நஜீப் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கில் இருதரப்பு வாதங்களும் நிறைவடைந்ததை அடுத்து, நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது. அதில், நஜீபுக்கு விதிக்கப்பட்ட 12 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், 210 மில்லியன் ரிங்கிட் அபராதமும் உறுதி செய்யப்படுவதாக உச்ச நீதிமன்றம் தெரிவித்தது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications