மலேசியாவில் போட்டோ எடுக்க விரும்பிய ரசிகருக்கு கேப்டன் விட்ட 'பளார்'!
கோலாலம்பூர்: மலேசியா சென்ற தேமுதிக தலைவர் விஜயகாந்த், தன்னுடன் புகைப்படம் எடுத்துக் கொள்ள விரும்பிய ஒரு ரசிகரை பளார் என்று அறைந்த சம்பவம் தமிழர்களிடம் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
விஜயகாந்தின் மகன் சண்முகப் பாண்டியன் நடித்து வரும் படம் "சகாப்தம்". இந்த படத்திற்கான படப்பிடிப்பிற்கு இடம் பார்ப்பதற்காக மலேசியாவின் கிழக்குப் பகுதியில் உள்ள கோத்தகினபாலு என்ற பகுதிக்கு குடும்பத்துடன் சென்றிருந்தார் விஜயகாந்த்.
அங்கு அமைந்துள்ள சுதேரா துறைமுக ரிசார்ட்டில் தங்கியிருந்த அவர்கள், அங்குள்ள கடைவீதியில் இருக்கும் தமிழ்மக்களிடம் பேசிக்கொண்டிருந்தனர். அப்போது பிரேமலாதா அவர்களிடம் போட்டோ எடுத்துக் கொள்ள விரும்பினால் மறுநாள் வாருங்கள் என்று கூறியுள்ளார்.
இதனால் மகிழ்ச்சி அடைந்த 6 தமிழர்கள் மறுநாள் காலையில் ரிசார்ட்டுக்கு சென்றுள்ளனர். அப்போது பிரேமலதா அங்கு இல்லை. விஜயகாந்த் வெளியில் நின்று பேசிக்கொண்டு இருந்துள்ளார்.

மீண்டும் புகைப்படம்:
புகைப்படம் எடுக்கச் சென்ற அவர்கள் விஷயத்தை கூறியதும் அவரும் ஒப்புக் கொண்டதால் இரண்டு, இரண்டு பேராக நின்று அவருடன் போட்டோ எடுத்துக் கொண்டனர். இந்நிலையில் காரைக்குடியைச் சேர்ந்த ஷாஜகான் என்பவர் விஜயகாந்துடன் மீண்டும் புகைப்படம் எடுத்துக் கொள்ள முயன்றார்.

விட்டார் ஒரு அறை:
இந்நிலையில் திடீரென்று கோபத்தின் உச்சிக்கு சென்ற விஜயகாந்த் போட்டோ எடுத்து விளையாடுறியா? என்று ஷாஜகானுக்கு விட்டார் ஒரு அறை. இதில் அதிர்ச்சி அடைந்த ஷாஜகான் அப்படியே தரையில் அமர்ந்துவிட்டார்.

தமிழ்ல எனக்கு பிடிச்சது மன்னிப்பு:
அப்போது அங்கு வந்த பிரேமலதா விஷயத்தை அறிந்து ஏன் இப்படி செய்தீர்கள் என்று கோபமாக கேட்டுள்ளார். அதற்கு விஜயகாந்த் கூலாக இப்போ மன்னிப்பு கேட்கணும் அவ்ளோதான...ஸாரி என்று கூறிவிட்டு முகத்தைத் திருப்பிக் கொண்டுள்ளார்.

கன்னம் பழுத்துருச்சுடா சாமி:
நாடு கடந்து வந்த விஜயகாந்துடன் புகைப்படம் எடுக்க ஆசைப்பட்டு வந்தால் இப்படியா அறைவார் என்று மலேசிய தமிழர்கள் வருத்தம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications