மலேசியாவில் பிரதமருக்கு எதிர்ப்பு... மோடியே திரும்பி போ என தமிழர்கள் முழக்கம்
மலேசியா சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிர்ப்பு தெரிவித்து அங்கு வாழும் தமிழர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
Recommended Video

கோலாம்பூர்: மலேசியா சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிர்ப்பு தெரிவித்து அங்கு வாழும் தமிழர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது மோடியே திரும்பி போ என முழக்கமிட்டனர்.
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு அனுமதி கொடுத்த நிலையில் அதை அங்கிருந்து அப்புறப்படுத்த வேண்டும் என்று மத்திய மாநில அரசுகளிடம் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர். எனினும் அது குறித்து நடவடிக்கை எடுக்காததால் கடந்த 100 நாட்களாக அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் கடந்த 22-ஆம் தேதி பேரணி சென்ற போராட்டக்காரர்கள் மீது போலீஸார் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் 13 பேர் பலியாகிவிட்டனர். 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துவிட்டனர்.

இதற்கு மோடி வாய் திறந்து எந்த ஒரு கண்டனத்தையும் தெரிவிக்கவில்லை. இந்நிலையில் அவர் மலேசியாவுக்கு சுற்றுப்பயணமாக இன்று சென்றுள்ளார். அங்கு அவரது வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து அங்குள்ள தமிழர்கள் மோடியே திரும்பி போ என கோஷமிட்டனர்.

பின்னர் போராட்டத்தில் ஈடுபட்ட அவர்கள் தமிழர்களை கொல்லாதே, தமிழ் மண்ணை சேதப்படுத்தாதே என்ற பதாகைகளை ஏந்தியிருந்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. ஏற்கெனவே காவிரி விவகாரத்தில் சென்னை வந்திருந்த மோடிக்கு கோ பேக் மோடி என்று கூறிய வாசகம் டுவிட்டரில் உலக அளவில் முதலிடத்தை பிடித்தது குறிப்பிடத்தக்கது.

-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன்












Click it and Unblock the Notifications