15 ஆண்டுகளாக இரட்டை சகோதரனை வயிற்றில் சுமந்த மலேசிய சிறுவன்
கோலாலம்பூர்: மலேசியாவில் 15 ஆண்டுகளாக தனது இரட்டை சகோதரனை வயிற்றில் சுமந்துள்ளார் ஒரு சிறுவன். இந்நிலையில் அறுவை சிகிச்சை மூலம் அவரது வயிற்றில் இருந்த கரு வெளியே எடுக்கப்பட்டுள்ளது.
மலேசியாவின் வடமேற்கு பகுதியில் உள்ள கேதா மாநிலத்தில் இருக்கும் பாலிங் நகரை சேர்ந்தவர் அஸ்மா அகமது. அவருக்கு 8 குழந்தைகள். அதில் 5வது குழந்தை முகமது ஜுல் ஷஹ்ரில் சைதின்(15). அஸ்மா கர்ப்பமடைந்தபோது சைதினுடன் இன்னொரு கருவும் உருவாகியுள்ளது. இரட்டையர்களில் ஒரு கரு தொப்புள் கொடி வழியாக மற்றொரு கருவின் வயிற்றுக்குள் சென்றுவிட்டது.

இதையடுத்து சைதின் பிறந்த நாளில் இருந்து அவரது வயிற்றில் இரட்டை சகோதரன் இருந்துள்ளார். இந்நிலையில் கடந்த நான்கு மாதங்களாக சைதினுக்கு வயிற்று வலியாக இருந்துள்ளது. மருத்துவ பரிசோதனையில் அவரது வயிற்றில் முழுவதும் வளர்ச்சியடையாத கரு இருந்ததை பார்த்து மருத்துவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
கேதாவில் உள்ள சுல்தான் அகமது ஹமீது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சைதினுக்கு அறுவை சிகிச்சை செய்து அவரது வயிற்றில் குழந்தை வடிவில் இருந்த கரு அகற்றப்பட்டது. அதற்கு கைகள், கால்கள், ஆணுறுப்பு, முடி இருந்தது. கண்களும், மூக்கும் தான் முழுமையாக வளர்ச்சி அடையவில்லை.
இரட்டையர்களில் ஒருவரின் வயிற்றில் கரு தங்கிவிடுவது 5 லட்சத்தில் ஒருவருக்கு நடக்கும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications