6 மாதத்தில் பிறந்த குழந்தைக்கு நானா தந்தை... மலேசிய மாஜி மன்னருக்கு வந்த சோதனையைப் பாருங்க!
திருமணமான சில மாதங்களிலேயே குழந்தை பெற்றெடுத்த ரஷ்ய மாடல் அழகியிடம் அந்த குழந்தைக்கு தான்தான் தந்தையா? என்று மலேசியா மன்னர் கேள்வி எழுப்பியுள்ளார்.
கோலாலம்பூர்: மலேசியா மன்னரை திருமணம் செய்த ரஷ்யாவை சேர்ந்த மாடல் அழகிக்கு ஆறு மாதத்தில் ஆண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது பரபரப்பாக பேசப்படுகிறது. அதே நேரத்தில் அந்த குழந்தை தன்னுடையதுதானா என்று கேட்டுள்ளார் முன்னாள் மன்னர் சுல்தான் முகம்மது.
மலேசியா நாட்டின் 15வது மன்னராக இருந்தவர் சுல்தான் முகம்மது. இவர் ரஷ்ய மாடல் அழகி ரிஹானா ஒக்சனா வியோடினாவை கடந்த ஆண்டு ஜூனில் ரகசியமாக திருமணம் செய்து கொண்டார். ஊடகங்களில் கிசுகிசுக்கள் பரவியதை அடுத்து வெளி உலக மக்களுக்கு தெரியும் வகையில் கடந்த நவம்பரில் திருமணம் செய்து கொண்டார்.
மாடல் அழகியுடனான மணவாழ்க்கை சந்தோசமாகவே போனது திடீரென தனது மனைவியை முத்தலாக் சொல்லி விவாகரத்து செய்தார் மன்னர் சுல்தான் முகம்மது. காரணம் மன்னரைப்பற்றி ரகசியங்களை ரஷ்ய ஊடகங்களில் வெளியிட்டதால் இந்த விவாகரத்து கொடுக்கப்பட்டதாக கூறப்பட்டது.

விவாகரத்து சர்டிபிகேட்
விவாகரத்து செய்த கையோடு மன்னர் பதவியையும் ராஜினாமா செய்து விட்டார் சுல்தான் முகம்மது. ரிஹானா ஒக்சனா வியோடினாவை சட்டப்படி விவகாரத்து செய்த சர்டிபிகேட் இணையதளங்களில் வெளியாகியுள்ளது. என்றாலும் மன்னர்தான் தனது கணவர் என்றும் அந்த திருமணம் பற்றிய நினைவுகளுடன் வாழ்ந்து கொண்டிருப்பதாகவும் கூறியுள்ளார் மாடல் அழகி.

ஆறு மாதத்தில் ஆண் குழந்தை
ஓக்சனாவிற்கு இப்போது ஆண் குழந்தை பிறந்துள்ளது. மன்னருடன் திருமணம் நடந்த ஆறு மாதத்தில் இந்த குழந்தை பிறந்ததுதான் பரபரப்பை மீண்டும் பற்றவைத்துள்ளது. ரஷ்யாவிற்கு திரும்ப சென்று விட்ட ஓக்சானா தனது மகனின் உடம்பில் மலேசியாவின் ரத்தம் ஓடுகிறது என்றும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். தான் கடைசி வரை அவருடன் இருக்கவே விரும்புகிறேன். எங்களின் வாழ்க்கை முடிவுக்கு வந்து விட்டதாக நினைக்கவில்லை என்றும் கூறியுள்ளார்.

பிற நபர்களுடன் நெருக்கம்
மன்னரை திருமணம் செய்த பின்னரும் பிற நபர்களுடன் நெருக்கமாக இருந்த வீடியோக்கள் இணையத்தில் வெளியானதை அடுத்தே முத்தலாக் சொல்லி விவாகரத்து செய்தார் முகம்மது. ஆனால் சட்டப்படி விவாகரத்து நடைபெறவில்லை என்றே கூறி வந்தார் முன்னாள் மனைவி. இந்த சூழ்நிலையில்தான் அந்த குழந்தை தன்னுடையதுதானா என்று வக்கீல் மூலம் தனது முன்னாள் மனைவியும் மாடல் அழகியிடம் கேள்வி எழுப்பியுள்ளார் முன்னாள் மன்னர்.

மன்னர்தான் கணவர்
விவாகரத்து அளித்த பின்னரும் மாடல் அழகி மன்னருடன் இருந்த புகைப்படங்கள், கர்ப்பகால புகைப்படங்கள், கவர்ச்சி புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டபடி இருந்தார். இப்போது மன்னரின் கேள்விக்கு பதில் அளிக்காத ஓக்சனா மீண்டும் குழந்தை உடன் இருக்கும் புகைப்படங்களை பதிவிட்டுள்ளார்.

விவாகரத்து சர்டிபிகேட்
இதுகுறித்து பேசிய முன்னாள் மன்னரின் வக்கீல், ஜூலை 1ஆம் தேதி சட்டப்படி விவாகரத்து அளிக்கப்பட்டு விட்டது. அது தொடர்பான சர்டிபிகேட் ஊடகங்களிலும் வெளியாகியுள்ளது. ரஷ்யாவில் வசிக்கும் ஓன்சானாவிற்கும் அனுப்பட்டு விட்டது என்றார். மன்னரின் மதிப்பையும், மாண்பையும் காப்பது தங்களின் கடமை என்றும் கூறியுள்ளார் அவரது வக்கீல்.

விவாகரத்துக்கு காரணம்
மாடல் அழகியின் அந்தரங்க வீடியோக்கள், பிறருடன் நெருக்கமாக இருந்த வீடியோக்கள் டிவி ரியாலிட்டி ஷோவில் வெளியானதை அடுத்தே விவாகரத்து செய்யும் முடிவை எடுத்தார் சுல்தான் முகம்மது. மன்னர் குடும்பத்திலும் இந்த வீடியோக்கள் புயலை கிளப்பியதை அடுத்தே பதவியை ராஜினாமாவும் செய்தார். இப்போது குழந்தை பிறந்துள்ளதன் மூலம் மன்னர் குடும்பத்தின் செய்திகள் ஊடகங்களில் பரபரப்பாக வெளியாகி வருகிறது.












Click it and Unblock the Notifications