மலேசியாவில் வளர்ப்பு மகள்களை பாலியல் வன்கொடுமை செய்த நபருக்கு 104 ஆண்டுகள் சிறை, 18 பிரம்படி!
கோலாலம்பூர்: வளர்ப்பு மகள்களைப் பாலியல் வன்கொடுமை செய்த மலேசியாவைச் சேர்ந்த 35 வயது நபருக்கு மொத்தம் 104 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது. மேலும், 18 பிரம்படிகள் கொடுக்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மலேசியா நாட்டின் சிபு நகரின் ஜாலான் சலிம் பகுதியில் வசிக்கும் 15 வயது மற்றும் 16 வயது நிரம்பிய இரு பெண் குழந்தைகளை, அவர்களது வளர்ப்புத் தந்தையே பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். தங்களது வீட்டில் தங்களுக்குப் பாலியல் கொடுமை இழைக்கப்பட்டதாக 15 வயது மற்றும் 16 வயது நிரம்பிய இரு பெண்களும் தங்களது தாயிடம் கூறினர்.

வளர்ப்புத் தந்தை, கடந்த 2020ஆம் ஆண்டு முதல் தங்களைப் பாலியல் வன்கொடுமை செய்து வந்ததாகவும் அவர்கள் முறையிட்டனர். கடந்த அக்டோபர் 25ஆம் தேதி இது குறித்து புகார் செய்யப்பட்டு, மறுநாள் மாலை 4.25 மணியளவில் அந்த நபர் கைது செய்யப்பட்டார். விசாரணையில் குற்றத்தை ஒப்புக்கொண்டார்.
இந்த வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்ற நிலையில், தம் மீது சுமத்தப்பட்ட ஒன்பது குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்ட அவர், மீண்டும் அத்தகைய குற்றத்தில் ஈடுபட மாட்டேன் என்றும் அதனால் தமக்குக் கருணை காட்டுமாறும் நீதிமன்றத்தில் வேண்டுகோள் விடுத்தார். குற்றவாளி விடுத்த வேண்டுகோளை நீதிமன்றம் நிராகரித்தது.
அவருக்கு எதிராகக் கடுமையான தண்டனைகளை நீதிபதி முஸ்யீரி பீட் விதித்தார். வளர்ப்பு மகள்களைப் பாலியல் வன்கொடுமை செய்த நபருக்கு மொத்தம் 104 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது. மேலும், 18 பிரம்படிகள் கொடுக்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பெண்களின் அடையாளத்தைக் காக்கும் பொருட்டு அந்த நபரைப் பற்றிய விவரங்கள் வெளியிடப்படவில்லை.
-
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
மூணாறு கொழுக்குமலை 400 அடி பள்ளத்தில் குதித்து இறந்த சென்னை இளைஞர்! -
குளிர்பானத்தில் மயக்க மருந்து.. ஏர்வாடி விடுதியில் கொடூரம்! கூட்டு பலாத்காரம்.. தவெக நிர்வாகி கைது -
சிறுமிகளுக்கு மது சப்ளை.. சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வந்த கோயம்பேடு பார்.. 'திடுக்' தகவல்! -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு












Click it and Unblock the Notifications