கசந்துபோன சீன உறவு.. இந்தியாவிடம் நெருக்கம் காட்டும் மாலத்தீவு அதிபர்! அக்டோபரில் டெல்லி வருகிறார்
மாலி: மாலத்தீவு அதிபர் சீனாவுடன் நெருக்கம் காட்டி வந்தது பெரும் விவாதமாகியிருந்த நிலையில், இந்தியாவுடன் சில விஷயங்களில் பகைத்துக்கொண்டிருந்தார். இந்நிலையில், தன்னுடைய நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டிருக்கும் அவர், அக்டோபர் மாதம் இந்தியாவுக்கு வர இருக்கிறார்.
மாலத்தீவு அதிபர் முய்ஜு அடிப்படையில் சீன ஆதரவாளர். கடந்த ஆண்டு நடைபெற்ற அந்நாட்டு நாடாளுமன்ற தேர்தலில், "நாங்கள் வெற்றி பெற்றால் மாலத்தீவில் உள்ள இந்திய ராணுவ வீரர்களை வெளியேற்றுவோம்" என்று வெளிப்படையாகவே கூறி போட்டியிட்டார். அதில் வெற்றியும் பெற்றார். இதனையடுத்து தற்போது அங்கிருந்த நமது 90 ராணுவ வீரர்கள் முழுவதுமாக வெளியேற்றப்பட்டிருக்கிறார்கள்.

அதாவது, மாலத்தீவுக்கு இந்தியா சார்பில், டோர்னியர் 228 கடல் ரோந்து விமானம் மற்றும் இரண்டு எச்ஏஎல் துருவ் ஹெலிகாப்டர்கள் வழங்கப்பட்டிருந்தன. இதனை பராமரிக்கவும், இயக்கவும் மாலத்தீவு ராணுவத்திற்கு உதவ சுமார் 90 இந்திய ராணுவ வீரர்கள் அங்கு இருந்தது வந்தனர். ஆனால் இவர்கள் நீண்ட காலமாக மாலத்தீவில் இருப்பது, தங்களது இறையாண்மையை பாதிப்பதாக கூறி வீரர்கள் அனைவரையும் வெளியேற்ற அந்நாட்டு அதிபர் முகமது முய்ஜு உத்தரவிட்டார்.
இதனையடுத்து இந்திய ராணுவ வீரர்கள் அனைவரும் அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர். இது தவிர, இந்தியாவுடன் போடப்பட்ட 'ஹைட்ரோகிராஃபிக் சர்வே' ஒப்பந்தத்தை புதுப்பிக்க போவதில்லை என்றும் மாலத்தீவு அறிவித்திருந்தது. அதாவது மாலத்தீவில் உள்ள நீர்நிலைகள், பாறைகள், கடற்கரையோரங்கள், கடல் நீரோட்டங்கள் மற்றும் அலை அளவுகள் ஆகியவற்றைப் பற்றி விரிவான ஆய்வை நடத்துவதே 'ஹைட்ரோகிராஃபிக் சர்வே' ஒப்பந்தமாகும்.
கடந்த 2018 முதல் இந்த ஒப்பந்தம் செயல்பாட்டில் இருந்து வருகிறது. ஆனால் தற்போது மாலத்தீவு அரசு இந்த ஒப்பந்தத்தை புதுப்பிக்க போவதில்லை என்று கூறிவிட்டது. இதற்கெல்லாம் ஹைலைட்டாக சீன உளவு கப்பல்களுக்கு மாலத்தீவு தொடர்ந்து அனுமதி அளித்து வருகிறது. இலங்கையும் உளவு கப்பல் விவகாரத்தில் இந்தியாவின் பேச்சை கேட்கவில்லை. அந்த வரிசையில் தற்போது மாலத்தீவும் இணைந்திருப்பது இந்தியாவுக்கு சற்று பின்னடைவாக பார்க்கப்பட்டது.
இந்த முரண்பாடுகளை சரி செய்ய இந்திய அரசு சமீபத்தில் முன் வந்து சில முயற்சிகளை மேற்கொண்டது. அதாவது, பிரதமர் நரேந்திர மோடியின் பதவியேற்பு விழாவில் முய்ஸுவுக்கு முதல் வரிசையில் இடம் ஒதுக்கப்பட்டிருந்தது. பதவியேற்பு விழா முடிந்த பின்னர், குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு விருந்து அளித்திருந்தார். இந்த விருந்தில் மோடிக்கு பக்கத்தில் முய்ஜு அமர்ந்திருந்தார். இடதுபுறம் முய்ஜுவும், வலதுபுறம் இலங்கையின் அப்போதைய அதிபர் ரணில் விக்ரமசிங்கவும் அமர்ந்திருந்தனர்.
இப்படியாக இந்தியாவும், தன் தரப்பில் தாராளம் காட்ட, மாலத்தீவு தற்போது இந்தியாவுடன் நெருக்கம் காட்டி வருகிறது. இப்போதைய சூழலில் சீனாவின் பொருளாதாரம் பெரிய அளவுக்கு வளரவில்லை. எனவே, அங்கிருந்து எந்த உதவியும் மாலத்தீவுக்கு கிடைக்காது என்பதை உணர்ந்துள்ள முய்ஸு, இந்தியாவிடமிருந்து உதவிகளை எதிர்பார்த்திருக்கிறார். எனவே, அக்டோபர் 6-10 வரை இந்தியாவுக்கு அவர் வருகிறார். இந்த வருகையின்போது பிரதமர் நரேந்திர மோடி, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் உள்ளிட்டோரை சந்திக்கிறார்.
இந்த பயணத்தின்போது மாலத்தீவுக்கான பல அத்தியாவிய உதவிகள் குறித்த கோரிக்கையை இந்தியாவிடம் முன்வைப்பார் என்று சொல்லப்படுகிறது. இதனை இந்தியா தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்ள இருக்கிறது.
-
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
சீனாவை சுற்றி வளைக்கும் இந்தியா.. இதுதான் ரியல் மாஸ்டர் பிளான்.. இனிமேல் தான் இருக்கு ஆட்டமே -
விஜய்யை எச்சரித்த மோடி.. கவனமாக இருங்கள்.. ரகசிய கேமரா இருக்கும்.. மீட்டிங்கில் சொன்ன அட்வைஸ் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
“இந்திய எல்லையை ஆக்கிரமித்திருக்கிறோம்..” நேபாள பிரதமரின் பேச்சால் உள்நாட்டில் வெடித்த சர்ச்சை! -
மன் கீ பாத்தில் மோடி சொன்ன லஸ்ஸி! கோடைக்கு குளிர்ச்சி தரும் ‘நம்கீன் லஸ்ஸி’! வீட்டிலேயே செய்யலாமே! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications