For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அட கொடுமையே.... நியூசிலாந்து நாடளுமன்றத்தின் கதவுகளை... கோடாரியால் அடித்து நொறுக்கிய நபர் கைது!

Google Oneindia Tamil News

வெலிங்டன்: நியூசிலாந்து நாடளுமன்ற கண்ணாடி கதவுகளை கோடரியால் அடித்து நொறுக்கிய நபரை போலீசார் கைது செய்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக பிடிபட்ட நபரிடம் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

Man arrested after axe attack on New Zealand parliament

நியூசிலாந்து தலைநகர் வெலிங்டனில் அந்த நாட்டு நாடாளுமன்றம் அமைந்துள்ளது. இந்த நாடாளுமன்ற கட்டிடம் பீஹைவ் என அழைக்கப்படுகிறது. இந்த நிலையில் இன்று அதிகாலை 5.30 மணியளவில் 31 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் நாடாளுமன்றத்தின் கண்ணாடி கதவுகளை கோடரியால் அடித்து நொறுக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.

Man arrested after axe attack on New Zealand parliament

இதனை அறிந்து உடனடியாக அங்கு வந்த போலீசார், அந்த நபரை கைது செய்தனர். இது தொடர்பாக போலீசார் கூறியதாவது:- அந்த நபர் கோடரியால் கண்ணாடி பேனல்களில் சிறிது சேதத்தை ஏற்படுத்தினார், ஆனால் கட்டிடத்திற்குள் நுழைய முயற்சிக்கவில்லை. இந்த சம்பவம் நடந்தபோது கட்டிடத்தின் உள்ளே சிலர் இருந்தனர். இந்த தாக்குதலுக்கு காரணம் என்ன என்பது உடனடியாக தெரியவில்லை. இது தொடர்பாக அவரிடம் விசாரித்து வருகிறோம் என்றனர்.

 நடிகர், நடிகைகளுக்கு போதை மருந்து சப்ளை.. விவேக் ஓபராய் மைத்துனர் ஆதித்யா ஆல்வா சென்னையில் கைது நடிகர், நடிகைகளுக்கு போதை மருந்து சப்ளை.. விவேக் ஓபராய் மைத்துனர் ஆதித்யா ஆல்வா சென்னையில் கைது

கைதான நபரை வெலிங்டன் மாவட்ட நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர்படுத்தினர். அவர் மீது வேண்டுமென்றே சேதம் விளைவித்தல், தாக்குதல் ஆயுதம் வைத்திருந்தல் என்ற வழக்கு பதியப்பட்டுள்ளது.

English summary
Police have arrested a man who smashed the glass doors of a New Zealand parliament with an axe
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X