ஜெர்மனி: பார் சண்டையில் எதிரியின் மூக்கை கடித்து துப்பிய குடிமகன் தலைமறைவு
பெர்லின்: பாரில் நடந்த சண்டையில் எதிராளியின் மூக்கை கடித்து துப்பிவிட்டு தலைமறைவான வாலிபரைப் ஜெர்மன் போலீசார் தேடி வருகின்றனர்.
ஜெர்மனியின் பிரெமென் நகரில் உள்ள மதுபான விடுதியில், நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் கூட்டம் நிரம்பி வழிந்தது. அப்போது, அங்கு போதை அதிகமான உள்ளூர்வாசிக்கும், நார்டென்ஹாம் பகுதியை சேர்ந்த ஒரு வாலிபருக்கும் ஏற்பட்ட வாய்த்தகராறு கைகலப்பாக மாறியது.
மற்ற குடிமகன்களின் தலையீட்டால் அப்போதைக்கு அவர்கள் பிரித்து வைக்கப்பட்டாலும், ஆத்திரம் அடங்கவில்லை நார்டென்ஹாம் நபருக்கு. உள்ளூர்வாசி அசந்த நேரத்தில் அவர் மீது பாய்ந்த நார்டென்ஹாம் நபர், அவரது மூக்கை கடித்து கீழே துப்பியுள்ளார். மற்றவர்கள் பிடிக்க முயற்சித்த போதும், அவர்களிடம் இருந்து தப்பி தலைமறைவாகி விட்டார் நார்டென்ஹாம் நபர்.
உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட உள்ளூர்வாசிக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். நடந்த சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் அளிக்கப் பட்டதையடுத்து தப்பியோடிய வாலிபரை பிரெமென் போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications