புதிய வலி நிவாரணி சோதனையில் விபரீதம்... பிரான்சில் மூளைச்சாவால் ஒருவர் பலி!
பாரிஸ்: பிரான்ஸ் நாட்டில் புதிய வலி நிவாரணி மருந்து சோதனைக்கு உட்படுத்தப்பட்ட நபர் ஒருவர், எதிர்பாராத விதமாக மூளைச்சாவு அடைந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
புதிதாக கண்டுபிடிக்கப்படும் மருந்துகளை முதலில் எலி உள்ளிட்ட ஐந்தறிவு உயிரினங்களுக்கு பயன்படுத்திப் பார்ப்பது வழக்கம். அதில் கிடைக்கும் முடிவுகளின் அடிப்படையிலேயே அவை எதிர்காலத்தில் மனிதர்களுக்கு பயன்படுத்தப்படும்.

இந்நிலையில், பிரான்ஸ் நாட்டில் பிரபல மருந்து தயாரிப்பு நிறுவனத்தின் புதிய கண்டுபிடிப்பான வலி நிவாரணி மருந்தை மனிதர்கள் 108 பேருக்கு அளித்து சோதனை மேற்கொண்டனர். இவர்களில் 90 பேருக்கு விதவிதமான அளவில் மருந்து அளிக்கப்பட்டு சோதனை செய்யப்பட்டது.
ஆனால், அவர்களுக்கு குறைந்த அளவிலான மருந்தே தரப்பட்டது. மீதமிருந்தவர்களில் ஆறு பேருக்கு மட்டும் அதிக அளவிலான மருந்து அளிக்கப்பட்டு சோதனை மேற்கொள்ளப்பட்டது.
இந்த சோதனை வடமேற்கு பிரான்சில் உள்ள ரென்னெஸ் ஐரோப்பிய ஆய்வகத்தில் நடைபெற்றது. அப்போது புதிய மருந்து தரப்பட்ட ஒருவருக்கு மூளைச்சாவு ஏற்பட்டது. மற்ற 5 பேரும் உடல்நலக் குறைவு காரணமாக சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இந்த சம்பவங்களைத் தொடர்ந்து அந்த மருந்து சோதனை உடனடியாக நிறுத்தப்பட்டது.
இந்நிலையில், மூளைச்சாவு அடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நபர் சிகிச்சைப் பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். மற்ற ஐந்து பேரும் குணமடைந்து வருவதாக கூறப்பட்டாலும், அவர்களில் மூவருக்கு சரிப்படுத்த முடியாத பக்கவாத பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக ரென்னெஸ் மருத்துவமனை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications