அமெரிக்காவில் ஆந்திர பொறியாளர் கொள்ளையர்களால் சுட்டுக் கொலை
தெற்கு கரோலினா: அமெரிக்காவில் வசித்து வந்த ஆந்திராவைச் சேர்ந்தவர் கொள்ளையர்களை தடுத்து நிறுத்தும்போது அவர்களால் துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார்.
ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டத்தில் உள்ள சித்தூர்பு கிராமத்தைச் சேர்ந்தவர் பரச்சூரி பாலகோபால்(43). ஆந்திராவில் பி.டெக். படித்த அவர் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்காவுக்கு சென்றுவிட்டார். அங்கு அவர் தனது மனைவி சௌஜன்யா, மகள் லிகிதா(12), மகன் சந்துவுடன்(10) வசித்து வந்தார்.

அமெரிக்காவின் தெற்கு கரோலினா மாவட்டத்தில் உள்ள மிர்டல் பீச் பகுதியில் பாலகோபால் கேஸ் நிலையம் வைத்திருந்தார். கடந்த வெள்ளிக்கிழமை இரவு 10.30 மணிக்கு சில மர்ம நபர்கள் அங்கு வந்து பாலாகோபாலை துப்பாக்கி முனையில் நிறுத்தி கல்லாவில் இருந்த பணத்தை கொள்ளையடித்தனர். பணத்தை எடுத்த பிறகு தப்பியோட முயன்ற கொள்ளையர்களை பாலகோபால் தடுத்து நிறுத்த முயன்றார்.
இதனால் ஆத்திரம் அடைந்த கொள்ளையர்கள் அவரை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுவிட்டு தப்பியோடிவிட்டனர். பாலகோபால் இறந்த தகவல் ஆந்திராவில் உள்ள அவரது குடும்பத்தாருக்கு சனிக்கிழமை தெரிவிக்கப்பட்டது.
பாலகோபாலின் பெற்றோர் பால நாகேஸ்வர ராவ் மற்றும் கிருஷ்ண குமாரி விஜயவாடாவில் உள்ள தடிகடப்பாவில் வசித்து வருகிறார்கள். அவர்கள் மகளை பார்க்க அருணாச்சல பிரதேசத்திற்கு சென்றுள்ளனர்.
பாலகோபாலின் உடலை ஆந்திரா கொண்டு வரத் தேவையான நடிவடிக்கைள் எடுக்கப்பட்டு வருகின்றது. பாலகோபால் கேஸ் நிலையம் தவிர பலசரக்கு கடையும் வைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
ஒரு மணிநேரத்தில் பதிலடி கொடுத்த ஈரானின் IRGC படை.. ஆடிப்போய் நிற்கும் அமெரிக்கா.. இனி ரொம்ப கஷ்டம்! -
ஈரானின் முதுகெலும்பில் தாக்கிய CENTCOM.. டிரம்ப் போட்டுக்கொடுத்த பிளான்..? கச்சிதமாக முடித்த US Army! -
Kuwait மீது திடீர் தாக்குதல் நடத்திய ஈரான்.. திரும்பும் பக்கமெல்லாம் ஏவுகணை சந்தம்.. பீதியில் மக்கள்! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications