சுரங்கத்தில் கிடைத்த கல்.. தங்கம் என நினைத்து வீட்டில் வைத்திருந்தவருக்கு ஷாக்.. மதிப்பே வேற லெவல்
சிட்னி; ஆஸ்திரேலியாவில் தங்கம் என்று நினைத்துக்கொண்டு அரிய பொருள் ஒன்றை நபர் ஒருவர் வீட்டில் வைத்திருந்த சம்பவம் பரபரப்பை ஏற்போடுத்தி உள்ளது.
ஆஸ்திரேலிய நாட்டை சேர்ந்த ஒருவர் தங்கம் தேடும் போது விசித்திரமான பாறை ஒன்றை 2015ல் கண்டுபிடித்தார். வீட்டிற்கு எடுத்துச் சென்று பல ஆண்டுகளாக அலமாரியில் வைத்திருந்தார். உள்ளே தங்கம் என்று நினைத்துக்கொண்டு பல ஆண்டுளாக் அவர் அலமாரியில் வைத்து இருந்துள்ளார்.

ஆனால் அது தங்கம் கிடையாது. தங்கத்தை விட பல மடங்கு விலை உயர்ந்த பொருள் அது என்று சமீபத்தில் கண்டுபிடித்துள்ளார். அப்படி என்ன நடந்தது? வாருங்கள் பார்க்கலாம்.
என்ன நடந்தது?: டேவிட் ஹோல் என்ற அந்த நபர் ஆஸ்திரேலியாவின் கேஜிஎப் என்று அழைக்கப்படும் மேரிபரோ பிராந்திய பூங்காவில் உள்ள தங்க சுரங்க பகுதியில் 2015ல் இந்த கல்லை கண்டுபிடித்தார்.
மேரிபரோ பிராந்திய பூங்காவில் ஒரு காலத்தில் தங்க சுரங்கம் இருந்ததால் உள்ளே தங்கம் கிடைக்கும் என்று பலரும் அடிக்கடி சென்று அங்கே தேடுவது வழக்கம். உள்ளே பலரும் அடிக்கடி தங்கத்தை கண்டுபிடிப்பது வழக்கம். சிலர் சிறிய சிறிய தங்க கற்களை கண்டுபிடிப்பது வழக்கம். இந்த நிலையில்தான் டேவிட் ஹோல் இதேபோல் தங்கம் கிடைக்குமா என்று உள்ளே சென்று சோதனை செய்துள்ளார். அப்போதுதான் அந்த கல்லை இவர் கண்டுபிடித்துள்ளார்.
அங்கே இருந்த பாறையில் ஒரு தங்கக் கட்டி இருப்பதாக நினைத்த டேவிட் அதை உடைக்க முயன்றார். அதைத் திறக்க முடியாமல் போனபோது, அடுத்த ஆறு வருடங்கள் அலமாரியில் வைத்தார். உள்ளே தங்கம் இருக்கும் எதிர்காலத்தில் உடைக்கலாம் என்று கல்லை வீட்டிலேயே வைத்துள்ளார். இடையில் பல முறை இதை உடைக்க முயன்று உள்ளார்.
ஆனால் அவரால் எவ்வளவு வலுவான ஆய்தம் வைத்தும் கூட உடைக்க முடியவில்லை. அப்போதுதான் வேறு வழியில்லாமல் டேவிட் சமீபத்தில் அதை மெல்போர்ன் அருங்காட்சியகத்திற்கு எடுத்துச் செல்ல முடிவு செய்துள்ளார். மெல்போர்ன் அருங்காட்சியகத்தின் வல்லுனர்கள் அதை சோதனை செய்த போது அந்த விசித்திரமான பாறை விண்வெளியில் இருந்து பூமிக்கு வந்த ஒன்று என்று கூறியுள்ளனர்.. அதாவது அது ஒரு விண்கல் என்று கூறியுள்ளனர்.
4.6 பில்லியன் ஆண்டுகள் பழமையான ஒரு அரிய விண்கல் அது என்பர் கண்டுபிடித்துள்ளனர். அருங்காட்சியகத்தின் ஆராய்ச்சி செய்து வரும் புவியியலாளர் டெர்மோட் ஹென்றி, 37 வருடங்கள் இப்பகுதியில் பணிபுரிந்ததில், இரண்டு உண்மையான விண்கற்களை மட்டுமே கண்டதாக கூறி உள்ளார். அதில் இந்த கல்தான் பார்த்ததிலேயே மிகவும் பழமையான கல் என்று கூறியுள்ளார்.
இது 17 கிலோ எடை கொண்டது ஆகும். உள்ளே முழுக்க முழுக்க கார்பன், இரும்பு மற்றும் நிக்கல் நிரம்பி காணப்பட்டு உள்ளது. அவர் சூப்பர்-ஹார்ட் வைர சாவை பயன்படுத்தி அந்த கல்லை வெட்டி உள்ளார். சாதாரண வெட்டும் கருவிகள் மூலம் இதை வெட்ட முடியாது என்பதால் சூப்பர்-ஹார்ட் வைர சாவை வைத்து இதை வெற்றி உள்ளார்.
பூமியில் இது 200 ஆண்டுகளுக்கு முன் விழுந்து இருக்கலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். இதை ஏலம் விட்டால் இதன் மதிப்பு பல கோடிகளை தாண்டும் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications