வெள்ளை மாளிகை வளாகத்திற்குள் பட்டாசை கொளுத்தி வீசிய நபர் கைது

Subscribe to Oneindia Tamil

Man throws fire crackers inside White House fence, arrested
வாஷிங்டன்: அமெரிக்காவில் உள்ள வெள்ளை மாளிகை வளாகத்திற்குள் பட்டாசை கொளுத்தி வீசியவர் கைது செய்யப்பட்டார்.

அமெரிக்காவின் வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகை அருகே இருக்கும் கடற்படை தளத்தில் ஒருவர் கண்மூடித் தனமாக சுட்டத்தில் 13 பேர் பலியாகினர். இந்நிலையில் இந்த சம்பவம் நடந்த சில மணிநேரத்தில் வெள்ளை மாளிகை வளாகத்திற்குள் நடுத்தர வயதைச் சேர்ந்த ஒருவர் பட்டாசுகளை கொளுத்தி வீசிவிட்டார். அது படபடவென வெடித்ததும் யாரோ துப்பாக்கியால் தான் சுடுகிறார்கள் என்று அங்கிருந்த செய்தியாளர்கள் நினைத்துவிட்டனர்.

இதையடுத்து செய்தியாளர்கள் மற்றும் வெள்ளை மாளிகை ஊழியர்கள் வெளியே செல்ல வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்பட்டனர். இதற்கிடையே பாதுகாப்பு அதிகாரிகள் பட்டாசை கொளுத்திப் போட்ட நபரை கைது செய்தனர்.

கடற்படை தளத்தில் நடந்த சம்பவத்தை அடுத்து வெள்ளை மாளிகை, பென்டகன் உள்ளிட்ட பல கட்டிடங்களுக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+