பச்சைக் குழந்தையை விற்க முயன்ற படுபாதக இளைஞன் -- இங்கிலாந்தில் கைது
Subscribe to Oneindia Tamil
லண்டன்: இங்கிலாந்தில் 3 மாத குழந்தையை விற்க முயன்ற இளைஞரை பொதுமக்கள் உதவியுடன் போலீசார் கைது செய்தனர்
இங்கிலாந்தின் மான்செஸ்டர் பகுதியில் உள்ள வணிக வளாகத்தில் நுழைந்த இளைஞர் ஒருவர், பொதுமக்களிடையே மூன்று மாத குழந்தை விற்பனைக்கு உள்ளதாக தெரிவித்துள்ளார். இளைஞரின் நடவடிக்கையைக் கண்டு அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் இது குறித்து காவல்துறையினருக்கு புகார் அளித்தனர்.
இதனைத் தொடர்ந்து அந்த இளைஞரை போலீசார் கைது செய்தனர். இச்சம்பவம் தொடர்பாக காவல் துறை அதிகாரி ஒருவர், "இது தொடர்பாக காவல்துறைக்கு தகவல் அளித்த பொதுமக்கள் மற்றும் ஊடகங்களுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்" என்று தெரிவித்துள்ளார்.
விற்பனைக்கு உள்ளாக்கப்பட இருந்த குழந்தை அந்த இளைஞருடையதா என்பதை அறிய போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.












Click it and Unblock the Notifications