பேஸ்புக் காதலியை சந்திக்க 10 நாட்களாக ஏர்போர்ட்டில் காத்திருந்த காதலன் !
பெய்ஜிங்: பேஸ்புக் காதலியை சந்திக்க விமான நிலையத்திலே 10 நாட்களாக காத்திருந்த காதலன் உடல் நலக் குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நெதர்லாந்தைச் சேர்ந்தவர் அலெக்ஸ்சாண்டர் பீட்டர்(41), இவருக்கும் சீனாவைச் சேர்ந்த ஜாங்(26), என்ற பெண்ணுக்கும் பேஸ்புக் மூலம் நட்பு ஏற்பட்டுள்ளது. பின்னர் நட்பு காதலாக மலர்ந்துள்ளது. பின்னர் தன் காதலியை நேரில் சந்திக்க முடிவு செய்துள்ளார் பீட்டர். உடனே இந்த தகவலை ஜாங்கிற்கு தெரியப்படுத்தியுள்ளார்.

இதையடுத்து சீனாவிற்கு கிளம்பி வந்துள்ளார். ஆனால், அவரின் காதலி அவரை சந்திக்க விமான நிலையத்திற்கு வராத காரணத்தால் அவர் தொடர்ந்து விமான நிலையத்தில் தங்கி காதலி வரும் வரையில் காத்திருந்தார்.
பின்னர் அவரின் உடல் நிலை மோசமானதை அறிந்த விமான நிலைய ஊழியர்கள் பீட்டரை மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். இருப்பினும் தனது காதலி விரைவில் தன்னை சந்திப்பார் என நம்பிக்கையுடன் இருக்கிறார் பீட்டர்.

இதுகுறித்து அவரின் காதலி அளித்துள்ள பேட்டியில், பீட்டர் சீனா வருவதாக தன்னிடம் தெரிவித்திருந்தார். விமான டிக்கெட்டையும் போட்டோ எடுத்து அனுப்பியிருந்தார். அதற்கு பின்னர் அவர் என்னை தொடர்பு கொள்ள வில்லை. அதனால் நான் அதை நம்பவில்லை. அறுவை சிகிச்சைக்காக தற்போது வேறொரு இடத்திற்கு சென்றிருப்பதாகவும், செல்போனை ஆப் செய்து வைத்திருந்ததாகவும் அந்த பெண் தெரிவித்துள்ளார்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications