'தம்பி' என்று தெரியாமல் திருமணம் செய்து குழந்தையும் பெற்ற பெண்!
சா பாலோ: பிரேசிலில் தான் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டவர் தன்னுடன் பிறந்த தம்பி என்பதை அறிந்த பெண் கடும் அதிர்ச்சி அடைந்தார்.
பிரேசிலை சேர்ந்தவர் ஏட்ரியனா(39). அவருக்கும் லியான்ட்ரோ(37) என்பவருக்கும் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. அவர்களுக்கு 6 வயதில் ஒரு மகள் உள்ளார். இந்நிலையில் அந்த தம்பதி தொலைந்த உறவினர்களை கண்டுபிடிக்கும் குளோபோ ரேடியோ நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
அழகுசாதன பொருட்கள் விற்கும் ஏட்ரியனாவுக்கு ஒரு வயது இருக்கையில் அவரை அவரது பெற்றோர் கைவிட்டனர். தற்போது டிரக் டிரைவராக உள்ள லியான்ட்ரோ 8 வயதாக இருக்கையில் தான் தன்னை வளர்ப்பது மாற்றாந்தாய் என்பதை தெரிந்து கொண்டார். மேலும் தனது தாயின் பெயர் மரியா என்பதையும் தெரிந்து கொண்டார். ஏட்ரியனாவுக்கு தனது தாயின் பெயர் மரியா என்பது மட்டும் தெரியும்.
தங்கள் இருவரின் தாயின் பெயரும் ஒன்று என்று நினைத்த தம்பதிக்கு ரேடியோ நிகழ்ச்சியில் பங்கேற்றபோது தான் இருவரும் ஒரு தாய் மக்கள் என்பது தெரிய வந்து அதிர்ச்சி அடைந்தனர்.
ஏட்ரியனாவும், லியான்ட்ரோவும் தம்பதிகளாக வந்தனர். நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிறகு தான் அவர்கள் அக்கா, தம்பி என்ற உண்மை தெரிந்து அதிர்ச்சி அடைந்ததாக குளோபோ ரேடியா ட்விட்டரில் தெரிவித்துள்ளது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications