செவ்வாய் கிரகத்தில் தண்ணீர் காணாமல் போக காரணம் என்ன? பூமிக்கும் இது நடக்கலாம்!
வாஷிங்டன்: நமது பக்கத்து கிரகமான செவ்வாயில் ஒரு காலத்தில் ஆறுகளும், குளங்களும் இருந்திருந்தன. ஆனால் இப்போது அது இல்லை. அங்கிருந்த நீர் எங்கே போனது? எப்படி காணாமல் போனது? என்கிற கேள்வி நீண்ட காலமாக விஞ்ஞானிகளின் மண்டையை குடைந்துக்கொண்டே இருந்தன. இந்நிலையில் தற்போது இதற்கான காரணத்தை அவர்கள் விளக்கியுள்ளனர். மட்டுமல்லாது செவ்வாய் கிரகத்தை போல நாளை பூமியிலும் நீர் காணாமல் போக வாய்ப்பு இருக்கிறது என்றும் எச்சரித்துள்ளனர்.
செவ்வாய் கிரகத்தில் இருந்த நீர் எப்படி காணாமல் போனது என்பது குறித்து கண்டறிய நாசா, 'மாவென்' எனும் செயற்கைக்கோளை அனுப்பியிருந்தது. இந்த செயற்கைக்கோள் கொடுத்த தகவல்களை ஆய்வு செய்தபோது, 'ஸ்பட்டரிங்' எனப்படும் முறையில்தான் செவ்வாயில் நீர் காணாமல் போனது என்று தெரிய வந்திருப்பதாக விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.

செவ்வாய் கிரகத்திலிருந்து 4 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் மொத்த நீரும் ஆவியாகிவிட்டது. இதற்கு சூரிய ஒளிதான் காரணம். செவ்வாய் பூமியிலிருந்து 2 கோடி கி.மீ தொலைவில் இருக்கிறது. அங்கு சூரிய ஒளி குறைவாகத்தான் இருக்கும். நம்மூரில் மாலை 6 மணிக்கு மேல் எப்படி வெளிச்சம் இருக்குமோ அதே அளவுக்குதான் அங்கும் வெளிச்சம் இருக்கும். அப்படியெனில் சூரிய ஒளி எப்படி அங்கிருக்கும் தண்ணீரை ஆவி ஆக்கியிருக்கும் என கேள்வி எழலாம்.
உண்மையில் சூரிய ஒளி தண்ணீரை ஆவியாக்கவில்லை. ஆனால் இந்த ஒளி செவ்வாய் கிரகத்தின் வளிமண்டலத்தை அழித்திருக்கிறது. வளிமண்டலம் இருந்தால்தான் காற்றில் ஈரப்பதம் இருக்கும். ஈரப்பதம் இருந்தால்தான் தண்ணீர், நீர் வடிவத்தில் இருக்கும்.
அதாவது செவ்வாய் கிரகத்தில் காந்தபுலம் அழிந்த பின்னர், சூரிய கதிர்களின் தாக்கம் அதிகமாக இருந்தது. இது மிக வேகமாக அதன் வளிமண்டலத்தை தாக்கும்போது, வளிமண்டலத்திலிருந்த மூலக்கூறுகள் விண்வெளிக்கு தெரித்தன. பைக் வாட்டர் சர்வீஸ் செய்யும்போது, வேகமாக தண்ணீரை பீய்ச்சி அடித்தால் அழுக்குகள் பறப்பதில்லையா? அதுபோலத்தான் இங்கும் நடந்திருக்கிறது. ஒரு நாள் இரண்டு நாள் கிடையாது.. லட்சக்கணக்கான ஆண்டுகளாக இப்படியே நடக்க, செவ்வாய் கிரகத்தில் வளிமண்டலம் அழிந்துள்ளது.
எனவே அங்கிருந்த நீர் எல்லாம் விண்வெளிக்கு ஆவியாகிவிட்டன. இப்படித்தான் அங்கு நீர் காணாமல் போயிருக்கிறது. பூமிக்கும் இதேபோன்ற ஆபத்து ஏற்படவும் வாய்ப்புகள் இருக்கின்றன.
குறிப்பாக, பூமியின் காந்த புலம் பாதிக்கப்படும்போது இது நடக்கும். சூரியனிலிருந்து வெளிவரும் புயல் வலுவாக இருப்பின் அது பூமியின் காந்த புலத்தை பாதிக்கும். இதனால் இங்கிருக்கும் நீர் ஆவியாகிவிடும். மட்டுமல்லாது, இன்னும் சில ஆயிரம் ஆண்டுகள் கழித்து பூமியின் மையப்பகுதி இறுகி இரும்பு உருண்டையாக மாறலாம். இப்படி நடந்தாலும் காந்த புலன் அழிந்துவிடும்.
செவ்வாய் மற்றும் நம்முடைய நிலவிலும் உட்கரு திரவ நிலையிலிருந்து திட நிலைக்கு மாறிவிட்டது. எனவேதான் அங்கு காந்தபுலன் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications