மோடி என் குடும்பத்தையே அழிச்சுட்டார்.. நானும் போய் சேர்ந்திருக்கனும்! கதறிய பயங்கரவாதி மசூத் அசார்!
இஸ்லாமாபாத்: காஷ்மீர் தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியா நடத்திய தாக்குதலில் 70-க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. குறிப்பாக ஜெய்ஸ்-இ-முகமது அமைப்பின் தலைமையகத்தை குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதலில் அந்த அமைப்பின் தலைவர் மசூத் அசாரின் குடும்பத்தினர் 10 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த நிலையில் இந்த தாக்குதலில் தானும் கொல்லப்பட்டிருக்க வேண்டும் எனவும், மோடி நடத்திய தாக்குதலில் தனது குடும்பமே அழிந்துவிட்டதாகவும் அறிக்கை வெளியிட்டுள்ளார் மசூத் அசார்.
ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் கடந்த மாதம் 22ஆம் தேதி தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய ராணுவம் 'ஆபரேஷன் சிந்தூர்' என்ற பெயரில் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகளில் உள்ள பயங்கரவாத முகாம்களை துல்லியமாக, ஆயுதங்களுடன் தாக்கியுள்ளது.
இந்த தாக்குதலில் 9 பயங்கரவாத முகாம்கள் அழிக்கப்பட்டுள்ளதாகவும், ஜெய்ஸ்-இ-முகமது, லஷ்கர்-இ-தொய்பா, ஹிஸ்புல் முஜாஹிதீன் ஆகிய அமைப்புகள் பயன்படுத்திய முகாம்கள் குறிவைத்து தாக்கப்பட்டூள்ளன.

மேலும், பாகிஸ்தான் நிலப்பரப்பில் உள்ள 4 முகாம்கள், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள 5 முகாம்கள் தாக்கப்பட்டன. பஹவல்பூர் (ஜெய்ஸ்-இ-முகமது தலைமையகம்), முரிட்கே (லஷ்கர்-இ-தொய்பா பயிற்சி முகாம்), கோட்லி (தற்கொலை தாக்குதல் பயிற்சி முகாம்), முசாபராபாத் (இறக்குமதி முகாம்), பர்னாலா (லஷ்கர் ஆதரவு முகாம்), சியால்கோட் (ஹிஸ்புல் முஜாஹிதீன் பயிற்சி முகாம்) ஆகியவை இந்த தாக்குதலில் குறிவைக்கப்பட்டுள்ளன. இந்த தாக்குதலில் ஏராளமான தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
குறிப்பாக ஜெய்ஸ்-இ-முகமது அமைப்பின் தலைமையகத்தை குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதலில் மசூத் அசாரின் குடும்பத்தினர் 10 பேரும் அவரது ஆதரவாளர்கள் நான்கு பேரும் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. அதே நேரத்தில் மசூத் அசார் உயிர் தப்பியதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த நிலையில் பிரதமர் மோடி தனது குடும்பத்தை அழித்து விட்டதாகவும், தானும் இந்த தாக்குதலில் கொல்லப்பட்டு இருக்க வேண்டும் என விரக்தியில் அறிக்கை வெளியிட்டிருக்கிறார் ஜெய் முகமது அமைப்பின் தலைவரான மஸ்ஜித் அசார்.
இதுதொடர்பாக வெளியாகியுள்ள அறிக்கையில்,"இன்றிரவு, எனது குடும்பத்தில் இருந்து 10 பேர் ஒரே நேரத்தில் ஜன்னத்தில் செல்வதற்கான பேறு பெற்றனர். ஐந்து குறும்புக் குழந்தைகள் ஜன்னத்துல் பிர்தௌஸின் மலர்களாகியுள்ளனர். என் வாழ்விற்கும் மேலான என் மூத்த சகோதரி சாஹிபா, அவரது கணவர், என் மருமகன் அலிம் ஃபாசில், அவரது மனைவி, எனது அன்பான உறவினர் அலாம் ஃபாஸிலா. எங்கள் மருமகன் மற்றும் அவரது மனைவி இறைவனுக்கு ப்ரியமானவர்கள் ஆகிவிட்டனர்.
மோடி, 5 குழந்தைகள், பெண்கள் மற்றும் முதியவர்கள் மீது குறிவைத்து தாக்கினார். இந்த துயரம் மற்றும் அதிர்ச்சி எனக்கு தாங்க முடியாதது. ஆனால் எனக்கு எந்த வருத்தமும் இல்லை, எந்த விரக்தியும் இல்லை, எந்த பயமும் இல்லை. என் மனதில் மீண்டும் மீண்டும் வருவது என்னவென்றால், நான் கூட இந்த 14 பேரில் ஒருவராக இருக்க வேண்டும். ஆனால், இறைவனை சந்திக்கும் நேரம் துல்லியமாக நிர்ணயிக்கப்பட்டது, அது ஒரு நொடி கூட முன்போ அல்லது பின்போ வராது. எங்கள் வீட்டில் இருந்த நான்கு குழந்தைகளும் - அவர்களின் வயது 7 முதல் 3 வரை - ஒரே நேரத்தில் சொர்க்கத்திற்கு சென்றுவிட்டனர்.
அவர்களுக்கு மரணம் கிடைக்கவில்லை, உயிர்தான் கிடைத்துள்ளது. குரான் கூறுகிறது, "மரணத்தை அல்லாஹ் நேசிக்கும் மனிதர்களுக்கு மட்டும் شهادت (இறப்பின் போதும் பரலோக வாழ்வில்) கிடைக்கும்." இந்த கொடூரம் அவர்களுக்கு செல்ல வேண்டும் என்று இறைவன் நிச்சயித்த நேரம்தான். ஆனால் அவர்களுக்கு வாழ்வு கிடைத்துள்ளது, மரணம் அல்ல. இப்போது மோடியின் இந்த கொடூரம் அனைத்து சாந்தி வழிகளை முறித்துவிட்டது. இனி எவரும் கருணைக்கு ஏதுவாக நம்பிக்கையை வைத்துக்கொள்ளக் கூடாது" என கூறியுள்ளார். இதனை பிபிசி உருது சேனலும் உறுதி செய்துள்ளது.
-
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி












Click it and Unblock the Notifications