மசூத் அசார் கதையை முடிக்கும் இந்தியா? பதுங்கிய இடத்தை கண்டுபிடித்த உளவுத்துறை.. பரபரப்பு தகவல்
இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் ‛ஜெய்ஷ் இ முகமது' பயங்கரவாத அமைப்பின் தலைவர் மசூத் அசார் இருக்கும் இடத்தை நம் உளவுத்துறை கண்டுபிடித்துள்ளது. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் அவர் உலா வருவது தெரியவந்துள்ளது. இந்த மசூத் அசார் ஆப்கானிஸ்தானில் உள்ளதாக பாகிஸ்தான் நாடாகமாடிய நிலையில் அது பொய் என நிரூபிக்கப்பட்டுள்ளது. மசூத் அசார் எங்கிருக்கிறார்? அவர் இருக்கும் இடத்தை நம் ராணுவத்தால் தாக்க முடியுமா? என்பது பற்றிய முக்கிய தகவல் வெளியாகி உள்ளது.
பாகிஸ்தான்.. பயங்கரவாதிகளின் கூடாரமாக விளங்கி வருகிறது. பயங்கரவாதிகளை உருவாக்குவதும், வெளிநாடுகளில் சதிவேலைகளை செய்து நாடு திரும்பும் பயங்கரவாதிகளுக்கு சிவப்பு கம்பள வரவேற்பும் கொடுப்பதையும் அந்த நாடு தொடர் கதையாக வைத்துள்ளது. பாகிஸ்தானில் பல்வேறு பயங்கரவாத அமைப்புகளின் தலைவர்கள் உள்ளனர்.

அந்த வகையில் நம் நாட்டில் பல்வேறு தாக்குதல்களுக்கு மூளையாக செயல்பட்ட ஜெய்ஷ் இ முகமது அமைப்பினர் தலைவர் மசூத் அசார் பாகிஸ்தானில் தான் உள்ளார். இவரது அமைப்பு நம் நாட்டில் பல சதிவேலைகளை செய்துள்ளது. கடந்த 25 ஆண்டுகளாக மசூத் அசார் நம்மிடம் சிக்காமல் பாகிஸ்தான் சுகபோக வாழ்க்கை வாழ்கிறான்.
சமீபத்தில் ‛ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கை மூலமாக அவனது பயங்கரவாத முகாமை நம் நாடு தாக்கியது. பயங்கரவாதிகளின் 9 முகாம்களைநம் நாடு குண்டு வீசி சிதைத்து. அதில் மிகவும் முக்கியமானது மசூத் அசாரின் தலைமை முகாம். சரியாக நம் எல்லையில் இருந்து 100.4 கிலோ மீட்டர் தூரத்தில், பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணம் பஹவல்பூரில் இருந்தது. அதனையும் நம் நாடு சிதைத்தது. இதில் மசூத் அசாரின் குடும்பத்தினர் 10 பேர் வரை பலியான நிலையில் மசூத் அசார் மட்டும் எஸ்கேப் ஆகிவிட்டான்.
இதனால் மசூத் அசாரின் இருப்பிடம் பற்றிய பல கேள்விகள் எழுந்தன. சமீபத்தில் பாகிஸ்தான் முன்னாள் வெளியுறவு அமைச்சர் பிலாவல் பூட்டோ பேசி இருந்தார். ‛சத்தியமாக மசூத் அசார் இங்கு இல்லை. அவன் பாகிஸ்தானில் தான் இருக்கிறான் என்பதை இந்தியா நிரூபித்து காட்டினால், நாங்களே அவனை கைது செய்து அனுப்பி வைக்கிறோம். ஆனால், அவன் இங்கு இல்லை என்பது தான் உண்மை. ஆப்கானிஸ்தானில் இருக்கலாம் என்பது எங்கள் சந்தேகம்' என்றார்.
இந்நிலையில் தான் பாகிஸ்தான் சொன்னது பொய். பிலாவல் பூட்டோ நம் நாட்டின் கவனத்தை திசை திருப்ப முயன்றது தெரியவந்துள்ளது. அதாவது மசூத் அசார் பாகிஸ்தானில் தான் இருப்பதை நம் நாட்டின் உளவுத்துறை கண்டுபிடித்துள்ளது. பஹவல்பூரில் இருந்த மசூத் அசார் தற்போது பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உலா வருகிறான். கில்கிட்-பால்டிஸ்தானின் ஸ்கார்டு என்ற இடத்தில் சொகுசு வாழ்க்கை வாழ்கிறான்.
இதற்கான ஏற்பாடுகளை பாகிஸ்தான் அரசு, பாகிஸ்தான் உளவுத்துறை ஐஎஸ்ஐ ஏற்படுத்தி கொடுத்துள்ளது. இது மசூத் அசார் முதலில் வசித்த பஹவல்பூரில் இருந்து 1000 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. மசூத் அசார் தற்போது தங்கியிருக்கும் இடத்தில் 2 மசூதிகளுடன், மதரசாக்கள் உள்ளன. அரசினர் விடுதி, விருந்தினர் மாளிகைகளும் இருப்பதாக திடுக்கிட வைக்கும் தகவல் வெளியாகி உள்ளது.
மசூத் அசார் தங்கியிருக்கும் இடத்தை நம் நாட்டால் தாக்க முடியுமா? என்றால் ஆம் என்பது தான் பதில். ஏனென்றால் இந்த இடம் ஜம்மு காஷ்மீரில் இருந்து கிட்டத்தட்ட 350 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது. எல்லை கட்டுப்பாட்டு கோட்டில் இருந்து வெறும் 120 கிலோ மீட்டர் தூரம் தான். எளிதில் ஏவுகணை வீசி தகர்க்க முடியும்.
இதனால் அவனது கதையை விரைவில் நம் முப்படை வீரர்கள் இணைந்து முடிக்கலாம். தற்போது பாகிஸ்தானில் பதுங்கி இருக்கும் இந்த மசூத் அசார் உலகளாவிய பயங்கரவாதி ஆவார். ஜெய்ஷ் இ முகமது அமைப்பின் தலைவனாக உள்ளான். காஷ்மீரில் தொடர்ச்சியாக பயங்கரவாத தாக்குதலில் ஈடுபட்டு வந்தான். பாகிஸ்தானில் இருந்து கொண்டு பயங்கரவாதிகளை ஏவி காஷ்மீரில் பிரச்சனைகளை ஏற்படுத்தினான்.
கடந்த 1994ம் ஆண்டில் காஷ்மீரில் கைது செய்யப்பட்டான். அதன்பிறகு 1999 டிசம்பர் 24ம் தேதி நேபாளம் தலைநகர் காத்மாண்டில் இருந்து டில்லி வந்த இந்தியன் ஏர்லைன்ஸ் விமானத்தில் பயணிகள் போல் பயணித்த அவனது கும்பல் விமானத்தை துபாய்க்கு கடத்தியது. 179 பயணிகள், 11 விமான பணியாளர்களை கொல்வதாக மிரட்டல் விடுத்தது. பயணி ஒருவரை குத்தி கொலை செய்த கும்பல் மற்றவர்கள் பணையக்கைதிகளாக பிடித்து வைத்து கொண்டது. மசூத் அசாரை விட்டால் தான் பயணிகளை விடுவதாக மிரட்டியது.
இதனால் வேறு வழியின்றி மசூத் அசார் ரிலீஸ் செய்யப்பட்டான். செய்தனர். அதன்பிறகு 2001 நாடாளுமன்றம் மீது தாக்குதல் நடத்தி 14 பேரை கொன்றான். 2016ல் பதான் கோட் விமானப்படை தளத்தில் துப்பாக்கிச்சூடு நடத்தினான். 2019ல் புல்வாமாவில் சிஆர்பிஎப் வீரர்களின் வாகனங்கள் மீது தற்கொலை படை தாக்குதல் நடத்த வைத்து 40 பேரை கொன்றான். இதனால் மசூத் அசாரை தொடர்ந்து நம் நாடு தேடி வருகிறது. பாகிஸ்தானின் செல்லப்பிள்ளையாக இருக்கும் மசூத் அசாரின் இருப்பிடம் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனால் விரைவில் மசூத் அசாரின் கதை முடியலாம் என்கின்ற டிபென்ஸ் எக்ஸ்பர்ட்டுகள்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications