"1000+ தற்கொலை படை வீரர்கள் தயார்!" கண் காட்டினால் போதுமாம்! பாகிஸ்தான் தீவிரவாதி மசூத் அசார் திமிர்
இஸ்லாமாபாத்: ஐநாவில் தடை செய்யப்பட்ட மோசமான தீவிரவாதியான அசாரின் ஆடியோ ஒன்று வெளியாகியுள்ளது. அதில் இந்தியா மீது ஒரு மோசமான தீவிரவாதத் தாக்குதலை நடத்தத் திட்டமிட்டு வருவது போல அவன் பேசியுள்ளான். தற்கொலைப் படை தீவிரவாதிகள் தயாராக இருப்பதாகவும் தான் அனுமதி கொடுத்தால் அவர்கள் வேலையை ஆரம்பிப்பார்கள் என்பது போல அசார் பேசியுள்ளது பரபரப்பைக் கிளப்பியுள்ளது.
பாகிஸ்தானில் இருக்கும் பயங்கரவாதிகள் தொடர்ச்சியாக இந்தியாவுக்கு எதிரான கருத்துகளைக் கூறுவதை வாடிக்கையாகவே வைத்துள்ளனர். இதற்கிடையே தடை செய்யப்பட்ட ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பின் தலைவர் மசூத் அசாரின் ஆடியோ ஒன்று வெளியாகிப் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.

அசார்
அதில் பல தற்கொலைப் படை தீவிரவாதிகள் எந்த நேரமும் தாக்குதலுக்குத் தயாராக இருப்பதாக அவன் கூறியிருக்கிறான். ஐ.நா.வால் தடை செய்யப்பட்ட பயங்கரவாதியான அசார், இதற்கு முன்பே கடந்த காலங்களில் பாகிஸ்தானிலிருந்தபடி இந்தியா மீது தாக்குதல்களைத் திட்டமிட்டுள்ளான். இது தொடர்பாக அவன் மீது ஏகப்பட்ட புகார்களும் உள்ளன. இந்தச் சூழலில் தான் அவனது இந்த ஆடியோ வெளியாகிப் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.
ஆயிரத்துக்கும் மேற்பட்ட தற்கொலைப் படை வீரர்கள் தயார் நிலையில் உள்ளதாகவும், இந்தியாவுக்குள் ஊடுருவ அனுமதிக்குமாறு தன்னை வலியுறுத்துவதாகவும் அசார் அந்த ஆடியோவில் கூறியுள்ளார். மொத்தம் எத்தனை தற்கொலைப்படை வீரர்கள் இருக்கிறார்கள் என்ற தகவல் வெளியானால், அது உலகையே அதிர்ச்சிக்குள்ளாக்கும் என்றும் அவர் குறிப்பிடுகிறார்.
தற்கொலைப்படை
அந்த ஆடியோவில் அவன் மேலும், "ஏதோ ஓரிருவர் (தற்கொலைப் படை தீவிரவாதி) மட்டும் ரெடியாக இருக்கவில்லை. 100 அல்லது 1,000 பேர் கூட இல்லை. முழு எண்ணிக்கையை நான் சொன்னால், நாளையே அது சர்வதேச அளவில் பரபரப்பை ஏற்படுத்திவிடும். அந்தளவுக்கு வீரர்கள் (தற்கொலைப் படை தீவிரவாதிகள்) தயார் நிலையில் இருக்கிறார்கள். இவர்கள் ஒரு பெரிய சம்பவத்தைச் செய்யவுள்ளனர்.. அதற்காக எந்தவொரு தியாகத்தையும் செய்ய இவர்கள் தயாராகவே உள்ளனர்" என்று அந்த பயங்கரவாதி கூறியுள்ளான்.
அசாரின் இந்த ஆடியோ இணையத்தில் வெளியாகி வேகமாகப் பரவி வருகிறது. அசார் சொல்வது உண்மை தானா.. அல்லது இந்த ஆடியோ எப்போது பதிவு செய்யப்பட்டது உள்ளிட்ட எந்தவொரு தகவலும் இல்லை. ஆனாலும், ஊடுருவல் குறித்து அசார் பேசியுள்ளது பேசுபொருளாகியுள்ளது.
முதல்முறை இல்லை
மேலும், இந்தியாவுக்கு எதிரான கருத்துகளை அசார் கூறுவது இது முதல்முறை இல்லை. ஏற்கனவே கடந்த பல ஆண்டுகளாக அவன் இந்தியாவுக்கு எதிராகத் தொடர்ச்சியாகச் சர்ச்சை கருத்துகளைக் கூறி வருகிறான். மேலும், இந்தியாவில் பயங்கரவாத தாக்குதல்களையும் கூட அவன் திட்டமிட்டு நடத்தியுள்ளான். 2001 நாடாளுமன்றத் தாக்குதல், 2008 மும்பைத் தாக்குதல் உள்ளிட்ட பல தாக்குதல்களின் மாஸ்டர் மைண்டாக அவன் இருந்துள்ளான்.
ஆபரேஷன் சிந்தூர் சமயத்தில் ஜெய்ஷ்-இ-முகமதுவின் பாகிவல்பூர் தலைமையகம் உட்பட பாகிஸ்தானில் உள்ள அதன் பல்வேறு மையங்கள் மீது மீது இந்தியப் படைகள் தாக்குதல் நடத்தியிருந்தது. இதில் உறவினர்கள் பலர் கொல்லப்பட்டனர். அதில் அசாரின் சகோதரி உட்படப் பல குடும்ப உறுப்பினர்கள் கொல்லப்பட்டனர். இதனால் அசார் இந்தியாவைப் பழிவாங்க வேண்டும் எனத் திட்டமிட்டு வருவதாகவும் சொல்லப்படுகிறது.
ஷாக் தகவல்கள்
கடந்த நவம்பர் 10ம் தேதி டெல்லி செங்கோட்டை அருகே ஏற்பட்ட கார் வெடிகுண்டு சம்பவத்தில் 15 பேர் உயிரிழந்திருந்தனர். அதில் சந்தேக நபரான உமர் முகமதுவுக்கும் அசாரின் ஜெய்ஷ்-இ-முகமது அமைப்புடன் தொடர்பு இருக்கலாம் என்றும் டெல்லி போலீசார் சந்தேகிக்கிறார்கள்.
மசூத் அசார் 2019 முதல் பொது நிகழ்ச்சி எதிலும் கலந்து கொள்ளவில்லை. அந்தாண்டு பாகிவல்பூரில் உள்ள அவரது பதுங்குமிடத்தில் குண்டுவெடிப்புத் தாக்குதல் நடந்தது. இருப்பினும், அதில் அசார் உயிர் தப்பினான். அப்போது முதலே அசார் தலைமறைவாக வாழ்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications