மரணமே இதை பார்த்தா கண்ணீர் விடும்.. ஒரே இடத்தில் புதைக்கப்பட்ட பிஞ்சுகள்! உலகை உலுக்கும் புகைப்படம்
டெஹ்ரான்: ஈரானின் தெற்குப் பகுதியில் உள்ள மினாப் நகரில் பள்ளி மீது அமெரிக்கா-இஸ்ரேல் நடத்திய கூட்டு தாக்குதல் இந்த சம்பவத்தில் 165 மாணவிகள் மற்றும் பணியாளர்கள் உயிரிழந்ததாக ஈரான் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த தாக்குதல் சனிக்கிழமை நடந்த நிலையில், உயிரிழந்த மாணவிகள் மற்றும் பள்ளி பணியாளர்களுக்காக பெரும்திரளான இறுதிச்சடங்கு நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு இறுதி அஞ்சலி செலுத்தினர்.
அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரானுக்கு எதிராக மேற்கொண்ட தாக்குதல்களுக்கு பின்னர், ஈரானும் பிராந்தியத்தில் ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களை அதிகரித்துள்ளது. இதனால் மேற்கு ஆசியப் பகுதி முழுவதும் பதற்றம் அதிகரித்துள்ளது.
இந்நிலையில், ஈரானின் வினாப் பகுதியில் அமெரிக்க ராணுவமும் இஸ்ரேல் ராணுவமும் இணைந்து கோரத் தாக்குதலை நடத்தின. இதில் பள்ளி ஒன்றின் மீது ஏவுகணைகள் விழுந்து வெடித்து சிதறியதில் அங்கு படித்து வந்த 165 மாணவிகளும் பள்ளியின் ஆசிரியர் உள்ளிட்ட பணியாளர்களும் உயிரிழந்த சம்பவம் மிகப் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இதுவரையிலான தாக்குதலில் அதிக உயிரிழப்புகளை ஏற்படுத்திய சம்பவமாக இந்த சம்பவம் பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் தாக்குதலில் உயிரிழந்த 165 மாணவிகள் மற்றும் பணியாளர்களுக்கு ஆயிரக்கணக்கானோர் திரண்டு இறுதி அஞ்சலி செலுத்தினர். மினாப் நகரின் பொதுத் திடலில் மக்கள் திரண்டனர். ஆண்கள் இஸ்லாமிய குடியரசு கொடியை ஏந்தி நின்றனர். பெண்கள் கருப்பு உடை அணிந்து துயரத்தில் கலந்து கொண்டனர். மேடையில் பேசிய ஒரு பெண், தன்னை "அடேனா" என்ற மாணவியின் தாயாக அறிமுகப்படுத்திக் கொண்டு, தனது மகளின் படத்துடன் "இது அமெரிக்க குற்றங்களின் சான்று" என்று கூறினார்.
அவரது உரைக்கு பின்னர் கூட்டத்தில் இருந்தோர் அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர். இந்த தாக்குதல் குறித்து இஸ்ரேல் ராணுவம் வெளியிட்டுள்ள விளக்கத்தில், அந்தப் பகுதியில் தாங்கள் அல்லது அமெரிக்கா தாக்குதல் நடத்தியதாகத் தகவல் இல்லை என்று தெரிவித்துள்ளது. இதற்கு முன்பும் காசா போரின் போது பல பொதுமக்கள் உயிரிழந்த தாக்குதல்களை இஸ்ரேல் ஆரம்பத்தில் மறுத்து பின்னர் தவறுதலாக நடந்ததாக விளக்கம் அளித்த சம்பவங்கள் இடம்பெற்றது குறிப்பிடத்தக்கது.
ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் அராக்சி, இந்த தாக்குதலுக்கு அமெரிக்காவும் இஸ்ரேலும் பொறுப்பேற்க வேண்டும் என்று குற்றம்சாட்டினார். 160-க்கும் மேற்பட்ட நிரபராத சிறுமிகளுக்காக கல்லறைகள் தோண்டப்படுகின்றன. அவர்கள் உடல்கள் சிதறடிக்கப்பட்டுள்ளன, என்று அவர் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.
அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் மார்க்கோ ரூபியோவிடம், இந்த சம்பவம் குறித்து கேட்கப்பட்டபோது, "அது எங்களின் தாக்குதல் என்றால் பாதுகாப்புத்துறை விசாரணை நடத்தியிருக்கும். அமெரிக்கா திட்டமிட்டு ஒரு பள்ளியை குறிவைக்காது," என்று கூறினார். அமெரிக்க மத்திய கட்டளைத் தளம் (United States Central Command) தற்போதைய இராணுவ நடவடிக்கைகளில் பொதுமக்கள்ளுக்கு பாதிப்பு ஏற்பட்டதாக தகவல்கள் வந்துள்ளன. இது தொடர்பாக ஆய்வு செய்யப்படுகின்றன," என தெரிவித்துள்ளது. இந்நிலையில், இந்த சம்பவத்தை UNESCO கண்டித்துள்ளது. மேலும், நோபல் அமைதிப் பரிசு பெற்ற கல்வி செயற்பாட்டாளர் மலாலா யூசுஃபி இதை கடுமையாக விமர்சித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
சிங்கப்பூரில் இந்தியாவை பாராட்டிய அமெரிக்க பாதுகாப்பு துறை அமைச்சர்.. வியந்து போய் சொன்ன விஷயம் -
கிரிப்டோகரன்சிக்கு மொத்தமாக வேட்டு வைத்த அமெரிக்கா.. நினைத்துகூட பார்க்காத அடி.. கலங்கி நிற்கும் ஈரான்! -
மொத்த இந்தியாவுக்கும் குட்நியூஸ்.. கச்சா எண்ணெய் விலை பெரும் சரிவு.. அப்போ பெட்ரோல், டீசல் விலை குறையுமா? -
ஆடிப்போன டிரம்ப்.. ஈரான் நினைத்தால்.. 1 வாரத்தில் 10 அணு ஆயுதங்கள் ரெடியாகும்.. வெளியான பரபர தகவல்! -
குட்டையை குழப்பும் இஸ்ரேல்.. ஈரானிடம் கெஞ்சும் டிரம்ப் அரசு.. இறுதிக்கட்டத்தில் போர்! -
ஈரானுடன் போர் நிறுத்தம்.. 14 பாயிண்ட்களை அடுக்கிய அமெரிக்கா! கையெழுத்து போடுவாரா டிரம்ப்? -
ஹார்முஸ் நீரிணைக்கு சுங்க கட்டணமா? மொத்த அரபு நாடுகளும் க்ளோஸ்.. அமெரிக்கா சீரியஸ் வார்னிங்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications