34 மனித மண்டை ஓடுகளுடன் தெற்கு சூடானில் சவக்குழிகள் கண்டுபிடிப்பு: ஐ.நா. தகவல்
ஜூபா: தெற்கு சூடானில் கண்டுபிடிக்கப் பட்டுள்ள சவக்குழிகளில் மனித மண்டையோடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதால், உள்நாட்டுப் போரில் பலியானவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கலாம் என அஞ்சப் படுகிறது.
2011-ம் ஆண்டு உதயமான தெற்கு சூடானில் அதிபர் சல்வா கீர் மாயர்தித்தின் ஆட்சி நடக்கிறது. டிங்கா பழங்குடி வகுப்பை சேர்ந்த சல்வா கீர் கடந்த ஜூலை மாதம் நூயெர் பழங்குடி இணத்தை சேர்ந்த துணை அதிபர் ரீக் மசூரை பதவியிலிருந்து அகற்றினார்.
இதையடுத்து அதிபரின் படைக்கும் ரீக் மசூரின் புரட்சிப்படைக்கும் இடையே கடந்த ஞாயிறன்று இரவு திடீரென கலகம் ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து அங்கு தற்போது கடுமையான உள்நாட்டு போர் நடக்கிறது.
அதிபர் சால்வா கீருக்கு எதிராக நடந்த இந்த கலகம் 2 நாட்களில் முறியடிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், ராணுவப் புரட்சியின் போது 400 முதல் 500 பேர் வரை பலியாகி இருப்பதாக ஐ.நா. அறிவித்தது.
புரட்சியில் ஈடுபட்டதாக முன்னாள் நிதி அமைச்சர் கோஸ்டி மானிப், முன்னாள் நீதித்துறை அமைச்சர் ஜான் லக் ஜோக், முன்னாள் உள்துறை அமைச்சர் ஜியர் சங் அலங் உள்பட 10 பேர் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளனர்.
தலைநகர் ஜுபாவில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ராணுவ புரட்சியின் விளைவாக சுமார் 20 ஆயிரம் பேர் ஜுபாவில் உள்ள ஐ.நா.வளாகத்தில் தஞ்சம் அடைந்துள்ளனர். முன்னாள் துணை அதிபர் ரிக் மச்சரின் ஆதரவு கலகக்காரர்கள் தலைநகர் ஜுபாவிலிருந்து 200 கி.மீ தொலைவில் உள்ள ஜாங்லீ மாநிலத்தின் தலைநகரான போர் நகரத்தை ஏற்கனவே கைப்பற்றியுள்ளனர். தற்போது எண்ணெய் வளம் மிகுந்த யூனிடி மாகாண தலைநகர் பென்துயூவை புரட்சிப்படையினர் கைப்பற்றி தங்களது கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளனர்.
இதுகுறித்து ஐ.நா. மனித உரிமை ஆணையர் நவநீதம் பிள்ளை கூறுகையில், ‘போராளிகள் வசமுள்ள பெண்டியூ நகரில் மிகப்பெரிய சவக்குழி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அப்பகுதிகளில் மேலும் இரண்டு சவக்குழிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து விசாரணை நடத்தப்படும் என்று எச்சரித்துள்ளார்.
இந்த சவக்குழியில் 34 பேரின் மண்டை ஓடுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. அதனைத் தொடர்ந்து உள்நாட்டுப் போரில் மேலும் நிறையப் பேர் கொல்லப்பட்டிருக்கலாம் என ஐ.நா. தகவல்கள் தெரிவிக்கின்றன.
-
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு? -
விஜய்யின் கனவு திட்டம்.. கூவம், அடையாறு ஆறுகளை மாற்றப்போகும் மாஸ்டர்பிளான்.. கைகோர்க்கும் டெல்லி












Click it and Unblock the Notifications