இலங்கை அதிபர் தேர்தலில் கிடைத்த மரண அடி.. வெளிநாட்டுக்கு ஓடிய நாமல் ராஜபக்சே குடும்பம்!
கொழும்பு: இலங்கையின் அதிபர் தேர்தலில் அநுர குமார திசநாயக்க 52.67% வாக்குகளை பெற்றுள்ளதால் அவரது வெற்றி உறுதியாகிவிட்டது. இலங்கை அதிபர் தேர்தலில் போட்டியிட்ட கோத்தபய ராஜபக்சேவின் மகன் நாமல் ராஜபக்சேவின் தோல்வி ஏறத்தாழ உறுதியாகிவிட்டது. இந்த நிலையில் நாமல் ராஜபக்சேவின் மனைவி, மாமனார் மற்றும் பாலித்த ரங்கே பண்டார உள்பட அவரது குடும்பத்தினர் விடிந்தும் விடியாமலும் வெளிநாட்டுக்கு பறந்துள்ளனர்.
இலங்கை அதிபர் தேர்தல் நேற்று தொடங்கியது. மொத்தம் 225 நாடாளுமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் நேற்று நடந்தது. வரலாற்றில் இல்லாதவாறு இலங்கை அதிபர் தேர்தல் அமைதியாக நடந்து முடிந்தது. நேற்று மாலை 4 மணியுடன் வாக்குப்பதிவு நிறைவடைந்தது. இலங்கை அதிபர் தேர்தலில் மொத்தம் 38 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.

தற்போதைய அதிபராக இருக்கும் ரணில் விக்கிரமசிங்கே, இலங்கையின் எதிர்க்கட்சி தலைவராக உள்ள சஜித் பிரமதாசா, என்பிபி எனும் தேசிய மக்கள் சக்தி கூட்டணி சார்பில் அநுர குமார திசநாயக்க, முன்னாள் அதிபர் மஹிந்த ராஜபக்சேவின் மகன் நாமல் ராஜபக்சே, பிஎஸ்ஏ எனும் போபகே மக்கள் போராட்ட கூட்டணி சார்பில் நுவான் போபகே உள்பட 38 பேர் அதிபர் வேட்பாளராக போட்டியிட்டனர்.
இதையடுத்து இன்று அதிகாலையில் வாக்குகள் எண்ணப்பட்டன. இதில் தொடக்கம் முதலே அநுர குமார திசநாயக்க முன்னிலை வகித்து வந்தார். தற்போதைய நிலவரப்படி அநுர குமார திசநாயக்க 52.67% வாக்குகளை பெற்று முன்னிலையில் உள்ளார். இதனால் இவரது வெற்றி உறுதியாகிவிட்டது. இலங்கை அதிபராக 50 சதவீத வாக்குகள் பெற வேண்டும் என்ற நிலையில் இவர் 52.67 சதவீத வாக்குகளை பெற்றுவிட்டதால் இவரது வெற்றி உறுதியாகிவிட்டது.
தற்போதைய அதிபர் ரணில் விக்ரமசிங்கே 18.99% வாக்குகள் பெற்று பெரும் பின்னடைவை சந்தித்தார். இதேபோல் சஜித் பிரேமதாஸா 21.79% வாக்குகள் பெற்று பின்னடைவடைந்தார். முன்னாள் அதிபர் மஹிந்த ராஜபக்சேவின் மகன் நாமல் ராஜபக்சேவும் பெரும் பின்னடைவை சந்தித்தார். ஏறத்தாழ தோல்வியடைந்து விட்டதால், ரமல் ராஜபக்சேவின் மனைவி, மாமனார் உள்ளிட்டோர் விடிந்து விடியாமலும் வெளிநாடுக்கு சென்றுவிட்டனர்.
இலங்கை அதிபர் தேர்தலில் பரபரப்பு முடிவுகள் வெளியாகிவிடும் நிலையில் பல முக்கிய பிரமுகர்கள் வெளிநாடுகளுக்கு சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகின்றன. கட்டுநாயக்க பண்டார சர்வதேச விமான நிலையத்திலிருந்து பல முக்கிய பிரமுகர்கள் வெளிநாட்டுக்கு புறப்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ராமல் ராஜபக்சேவின் மனைவி லிமினி வினோஜா வீரசிங்க மற்றும் அவரது தந்தை திலகசிறி வீரசிங்க ஆகியோர் இன்று அதிகாலை 3.30 மணிக்கு துபாய் புறப்பட்டு சென்றுள்ளனர். அமெரிக்காவுக்கு செல்ல நேரடி விமானம் இல்லாததால், கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து துபாய் சென்று அங்கிருந்து அமெரிக்கா செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
50 சதவீதத்துக்கும் அதிகமான வாக்குகளை பெற்று இலங்கை அதிபராக தேர்வாகவுள்ள அநுர குமார திசநாயக்க பிரசாரத்தின் போது ஊழலுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுப்பதாக பேசியிருந்தார். இத்தகைய சூழலில் தான் நாமல் ராஜபக்சே குடும்பத்தினர் விடிந்தும் விடியாமலும் வெளிநாட்டுக்கு சென்றுள்ளனர்.
இலங்கை அரசியலை எடுத்து கொண்டால் ராஜபக்சே குடும்பம் முக்கிய பங்கு வகித்து வருகிறது. 2019 ஆம் ஆண்டு இலங்கை அதிபராக கோத்தபய ராஜபக்சே தேர்ந்தெடுக்கப்பட்டார். அவரது சகோதரர் மகிந்த ராஜபக்சே பிரதமராக நியமிக்கப்பட்டார். இவர்களது ஆட்சியில் மக்கள் மத்தியில் கொந்தளிப்பு ஏற்பட்டது. மிகப்பெரிய போராட்டம் செய்து கோத்தபய சகோதரர்களை ஆட்சியில் இருந்து அக்கற்ற கோரி அதிபர் மாளிகையை முற்றுகையிட்டனர்.
கடந்த 2022ம் ஆண்டில் ராஜபக்சே குடும்பத்துக்கு எதிராக மக்கள் உயர்த்திய போர்க்கொடியால், மஹிந்த ராஜபக்சே பிரதமர் பதவியையும், கோத்தபய ராஜபக்சே அதிபர் பதவியையும் ராஜினாமா செய்தனர். கோத்தபய ராஜபக்சே நாட்டை விட்டு வெளியேறினார். இந்நிலையில் தான் அவரது மகன் நாமல் ராஜபக்சே தேர்தலில் போட்டியிட்டு ஏறத்தாழ தோல்வியை சந்தித்துள்ளதால், அவரது குடும்பத்தினர் வெளிநாடு சென்றுள்ளனர்.












Click it and Unblock the Notifications