ஐன்ஸ்டீனை தூக்கி சாப்பிட்ட 10 வயது இந்திய பிரிட்டிஷ் சிறுவன்.. உலகின் 99% மக்களை விட புத்திசாலியாம்!

Subscribe to Oneindia Tamil

லண்டன்: 10 வயதில் உள்ள குழந்தைகள் எப்போதும் ஜாலியாக தான் இருப்பார்கள். ஆனால், பிரிட்டன் நாட்டின் மேற்கு லண்டனில் உள்ள ஹவுன்ஸ்லோவைச் சேர்ந்த 10 வயது இந்தியப் பிரிட்டிஷ் சிறுவன் கிரிஷ் அரோராவின் அறிவாற்றலை பார்த்து ஒட்டுமொத்த பிரிட்டனும் வியந்து நிற்கிறது. யார் இந்த கிரிஷ்.. இவரைப் பார்த்து நாடே வியந்து நிற்க என்ன காரணம் என்பதை நாம் பார்க்கலாம்.

பொதுவாக ஒருவரது அறிவுத்திறன் ஐ.க்யூ எனப்படும் intelligence quotient மூலமாகவே அளவிடப்படும். இந்த கிரிஷ் அரோராவுக்கு சமீபத்தில் ஐக்யூ சோதனை செய்யப்பட்டுள்ளது.

england world offbeat

ஐக்யூ மார்க்: அதில் அவர் உலகின் தலைசிறந்த அறிஞர்களாகக் கருதப்படும் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் மற்றும் ஸ்டீபன் ஹாக்கிங்கை தூக்கிச் சாப்பிடும் வகையில் 162 ஐக்யூ மார்க் பெற்று உலகையே திகைக்க வைத்துள்ளார். இதன் மூலம் உலகில் தலைசிறந்த அறிவாளிகளில் டாப் 1%ல் கிரிஷ் அரோரா இடம்பிடித்துள்ளார். இவ்வளவு ஐக்யூ மார்க் பெற்றதால் கிரிஷை அறிவாளிகள் மட்டுமே படிக்கும் மென்சா பள்ளியில் சேர அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மேலும், அவர் பிரிட்டனில் மிகவும் உயர்ந்த பள்ளியாகக் கருதப்படும் ராணி எலிசபெத் பள்ளியிலும் சேர்ந்துள்ளார்.

என்ன சொல்கிறார்: இது தொடர்பாக கிரிஷ் கூறுகையில், "அதில் இருந்த 11-க்கும் மேற்பட்ட தேர்வுகள் மிகவும் எளிதாக இருந்தன. புதிய பள்ளியில் சேர்வது ஆர்வமாகவே இருக்கிறது. அங்கு எனக்கு ஏற்ப பாடங்கள் இருக்கும் என நான் நினைக்கிறேன். ஏனென்றால் எனக்கு ஆரம்பப் பள்ளி சலிப்பாக இருக்கிறது. அங்கு நான் எதையும் புதிதாக கற்கவில்லை. நாள் முழுக்க எளிமையான கணக்கு அல்லது சும்மா ஒரு பாரா மட்டும் எழுதச் சொல்கிறார்கள். அது போர் அடிக்கிறது. எனக்கு அல்ஜீப்ராவில் தான் அதிக விருப்பம். புதிய பள்ளியில் அதைச் செய்ய முடியும் என நம்புகிறேன்" என்கிறார் அதே உற்சாகத்துடன்..!

பெற்றோர்: கிரிஷின் பெற்றோர்களான மௌலி மற்றும் நிஷால் ஆகிய இருவரும் பொறியாளர்கள் ஆவர். தங்கள் குழந்தைக்கு நான்கு வயதாக இருந்தபோது இந்த திறமை இருப்பதை அவர்கள் கண்டறிந்தனர். இது தொடர்பாக ஐடி நிறுவனத்தில் பணிபுரியும் மௌலி கூறுகையில், "அவன் 4 வயதாக இருக்கும் போதே பல விஷயங்களைச் செய்வான். வழக்கமாக 4 வயதுக் குழந்தையால் செய்ய முடியாத பல விஷயங்களைச் செய்வான்.

சரளமாகப் படிப்பான். எழுத்துப்பிழை இல்லாமல் வாக்கியம் எழுதுவான். எல்லாவற்றையும் தாண்டி அவனுக்குக் கணக்கு விருப்ப பாடமாக இருந்தது. நான்கு வயதாகும் முன்பே, அவன் என்னுடன் உட்கார்ந்து கணித புத்தகத்தையும் ஒரே நாளில் முடித்தது இன்னும் எனக்கு நினைவு இருக்கிறது. டெசிமல் கணக்குகளைக் கூட அப்போதே எளிதாகப் போடுவான்" என்றார்.

இசையிலும் சாதனை: வெறும் எட்டு வயதிலேயே க்ரிஷ் தனது ஓராண்டு பாடத்தை ஒரே நாளில் படித்து முடிந்துள்ளான். இதுபோல எதை செய்தாலும் வேகமாக மட்டுமின்றி துல்லியமாகவும் க்ரிஷ் செய்து முடிப்பான் என்கிறார் அவரது தாய் நிஷால். படிப்பு மட்டுமின்றி க்ரிஷுக்கு மியூசிக்கிலும் ஆர்வம் அதிகமாம். பியானோ கலைஞராக அவர் பல விருதுகளை வென்றுள்ளார்.

வெறும் ஆறு மாதங்களில் நான்கு கிரேட்களை முடித்த க்ரிஷ், இப்போது பின்னர் டிரினிட்டி இசைக் கல்லூரியால் ஹால் ஆஃப் ஃபேமிலும் இருக்கிறார். பியானோவில் அவர் 7 கிரேடுகளை முடித்துள்ளார். இப்போதும் கூட பதற்றமே இல்லாமல் இசையை ஜாலியாக வாசிப்பாராம். பேப்பர் எதையும் பார்க்காமல் வாசித்தாலும் நோட்ஸ் எல்லாம் அவ்வளவு துல்லியமாக இருக்கும் என்று வியக்கிறார் அவரது தாய் நிஷால்..!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+