வானில் சுழன்றடித்த புயல்.. உடலை சில்லிட வைக்கும் வீடியோ.. உயிரை பணயம் வைத்து எடுத்த விமானப்படை வீரர்கள்
கிங்ஸ்டன்: வரலாற்றில் முதல் முதலாக ‛கேட்டகிரி 5' வகையை சேர்ந்த‛மெலிசா' என்ற புயல் ஜமைக்காவில் இன்று கரையை கடக்க உள்ளது. மிகவும் சக்திவாய்ந்த இந்த புயலால் ஜமைக்காவிற்கு பேராபத்து வரலாம் என்று அஞ்சப்படுகிறது. இந்நிலையில் தான் ‛மெலிசா' புயல் வானில் எப்படி உள்ளது என்பதை அமெரிக்காவின் விமானப்படை வீரர்கள் வீடியோ எடுத்து வெளியிட்டுள்ளனர். அந்த வீடியோ அனைவரையும் சிலிர்க்க வைத்துள்ளது.
வங்காள விரிகுடாவில் உருவாகியுள்ள ‛மொந்தா’ புயல் இன்று மாலை அல்லது இரவில் ஆந்திர மாநிலத்தின் மசூலிப்பட்டணம் மற்றும் காக்கிநாடா இடையே கரையைக் கடக்க உள்ளது. தற்போது புயல் கரையை நெருங்கி வருகிறது. இந்த புயல் காரணமாக சென்னை மற்றும் அதனை சுற்றிய இடங்களில் மழை பெய்து வருகிறது.
ஆந்திராவில் கனமழை பெய்து வருகிறது. இதனால் ரயில், விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளது. ஆந்திராவில் புயலால் பாதிக்கப்படும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

அதேபோல் கரீபியன் நாடுகளில் வெப்ப மண்டல புயல்கள் அடிக்கடி உருவாவது உண்டு. இந்நிலையில் தான் சில நாட்களாக ‛மெலிசா' என பெயரிடப்பட்ட புயல் கரீபியன் நாடுகளில் தாக்கி வருகிறது. ஹைதி, ஜமைக்கா உள்ளிட்ட நாடுகளில் இந்த புயல் பாதிப்புகளை ஏற்படுத்தி உள்ளது.
இந்த ‛மெலிசா' புயல் ‛கேட்டகிரி 5' வகையை சேர்ந்தது என வகைப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் இது மிகவும் ஆபத்தான புயலாகும். அதாவது மணிக்கு 252 கிலோமீட்டர் வேகம் அல்லது அதற்கு மேலான வேகத்தில் சூறைக்காற்று வீசும்.
தற்போது தொடர் மழை, சூறாவளி காற்றால் கடல் கொந்தளிப்புடன் காணப்படுகிறது. பல இடங்களில் நிலச்சரிவு, வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. வீடுகளை பொதுமக்கள் இழந்துள்ளனர். ஹைதியில் 3 பேர் உயிரிழந்து உள்ளனர். டோமினிகன் குடியரசு நாட்டில் ஒருவர் பலியாகி உள்ளார். மெலிசா புயலால் மொத்தம் பலியானோர் எண்ணிக்கை 4 ஆக உயர்ந்து உள்ளது இந்த ‛மெலிசா' புயல் இன்று மாலையில் ஜமைக்காவில் கரையை கடக்க உள்ளது.
இந்நிலையில் அமெரிக்காவின் விமானப்படை விமானம் வானில் ‛மெலிசா' புயல் எப்படி உள்ளது? என்பதை வீடியோவாக எடுத்துள்ளது. விமானப்படை விமானத்தில் பறந்த வீரர்கள் உயிரை பணயம் வைத்து இந்த வீடியோவை எடுத்துள்ளனர்.
This footage from inside the eye of Category 5 Hurricane Melissa might be the most jaw-dropping video ever captured of a hurricane’s eye, showcasing the infamous “stadium effect." pic.twitter.com/AEhj2g2Ban
— Colin McCarthy (@US_Stormwatch) October 27, 2025
இந்த வீடியோ தற்போது வெளியாகி அனைவரையும் சிலிர்க்க வைத்துள்ளது. அதில் மேகக்கூட்டங்கள் வெள்ளை நிறத்தில் வேகமாக நகர்கின்றன. பெரிய பேரலை ஆக்ரோஷமாக வந்தால் எப்படி இருக்கும்? அதுபோன்று வானில் மேகக்கூட்டம் ஒன்றாக திரண்டு இருக்கின்றன.
அதோடு மேகக்கூட்டங்கள் கீழிருந்து மேலாகவும், மேலிருந்து கீழாகவும் சுழல்கின்றன. மேலும் பேரிரைச்சல் கேட்கிறது. இதுபோன்ற வீடியோக்களை பலரும் பார்த்து இருக்கமாட்டார்கள். இதனால் இந்த வீடியோ தற்போது இணையதளங்களில் அதிக கவனம் பெற்றுள்ளது. பலரும் இந்த வீடியோவை பார்த்து சிலிர்த்துப்போய் உள்ளனர்.
இந்த புயல் காரணமாக தற்போது 50 ஆயிரம் மக்கள் மின்வசதி இன்றி உள்ளனர். பல இடங்களின் நிலச்சரிவு ஏற்பட்டு மரங்கள், மின்கம்பங்கள் முறிந்து விழுந்துள்ளதால் மின்சாரம் துண்டிக்கப்பட்டு வருகிறது. இந்த புயல் ஜமைக்காவின் தலைநகர் கிங்ஸ்டன் கடற்கரையை நெருங்க உள்ளது. இந்த நகரில் விமான நிலையம், மின் உற்பத்தி நிலையங்கள் உள்ளன. இதனால் பெரும் பாதிப்பு ஏற்படலாம் என்று கூறப்படுகிறது. இதுபற்றி ஜமைக்காவின் பிரதமர் ஆண்ட்ரூ ஹோல்நஸ் கூறகையில், ‛‛மக்களுக்கும், நாட்டுக்கும் எந்த பாதிப்பும் வரக்கூடாது என்று கடவுளிடம் பிரார்த்தனை செய்கிறேன்'' என்று கூறியுள்ளார்.
ஜமைக்காவை எடுத்து கொண்டால் இது தான் வலுவான புயலாகும். ஜமைக்காவில் கடந்த 174 ஆண்டு கால வரலாற்றில் ‛கேட்டகிரி 4 அல்லது அதற்கு மேலான கேட்டகிரி கொண்ட புயல்கள் கரையை கடந்தது இல்லை. இதற்கு முன்பு 1988 ம் ஆண்டில் தான் ஜில்பர்ட் என்ற புயல் (கேட்டகிரி 3) கரையை கடந்தது. அதன்பிறகு இவான், பெர்ல் புயல்கள் கேட்டகிரி 4ல் இடம்பெற்றிருந்தாலும் அது ஜமைக்காவில் கரையை கடக்கவில்லை. ஆனால் இந்த ‛மெலிசா' புயல் கேட்டகிரி 5ல் உள்ளது. இதனால் ஜமைக்கா பெரும் சேதத்தை எதிர்கொள்ளும் என்று அஞ்சப்படுகிறது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications