இந்தியாவிற்கு அமெரிக்காவை தொடர்ந்து இன்னொரு நாடும்,, பெரிய அளவில் வரி.. ஏற்படப்போகும் பாதிப்பு
நியூயார்க்: அமெரிக்க ஜனாதிபதியாக டிரம்ப் மீண்டும் பதவியேற்ற பின்னர் இந்தியா மீது பரஸ்பவரம் வரியாக 25 சதவீதமும், ரஷ்யாவிடம் ஆயில் வாங்குவதற்காக ஒரு25 சதவீதம் தண்டனை வரி என மொத்தமாக 50 சதவீதம் வரி விதித்தார். அந்த வரி குறைப்பு எப்போது நடக்கும் என்று தெரியவில்லை.. விரைவில் தீர்வு கிடைக்கும் உற்பத்தியாளர்கள் நம்பி கொண்டிருக்கிறார்கள். அமெரிக்கா ஒருபுறம் எனில் மெக்சிகோவும் 35 சதவீதம் முதல் 50 சதவீதம் வரை விதிக்க போவதாக அறிவித்துள்ளது. இதனால் ஏற்பட போகும் பாதிப்புகள் என்னென்ன என்பதை பார்ப்போம்.
அமெரிக்காவை தொடர்ந்த அமெரிக்காவின் அண்டை நாடான மெக்சிகோவின் நாடாளுமன்றமான செனட்டில் இந்தியா, சீனா, தாய்லாந்து, இந்தோனேசியா உள்பட அனைத்து ஆசிய நாடுகளிலும் இருந்து மெக்சிகோவுக்கு இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 35 சதவீதம் முதல் 50 சதவீதம் வரை வரி விதிக்க திட்டமிட்டுள்ளது. இந்த வரிவிதிப்பு வருகிற ஜனவரி மாதம் முதல் அமலுக்கு வருகிறது.

தங்களுடன் தடையில்லா வர்த்தக ஒப்பந்தத்தை மேற்கொள்ளாத நாடுகளுக்கு இந்த வரி விதிக்கப்படுகிறது என்று மெக்சிகோ அறிவித்துள்ளது இந்தியா, மெக்சிகோ இடையே வர்த்தக இடைவெளி அதிகமாக இருக்கிறது. கடந்த ஆண்டு நிலவரப்படி, இந்தியாவில் இருந்து மெக்சிகோவுக்கு கடந்த ஆண்டு 5.7 பில்லியன் டாலர் (ரூ.5.13 லட்சம் கோடி) அளவுக்கு ஏற்றுமதியும், மெக்சிகோவில் இருந்து இந்தியாவுக்கு 2.9 பில்லியன் டாலர் (ரூ.2.61 லட்சம் கோடி) அளவுக்கு இறக்குமதியும் நடந்துள்ளது.
மெக்சிகோவுக்கு இந்தியாவின் ஏற்றுமதி 2.8 பில்லியன் டாலர் (ரூ.2.52 லட்சம் கோடி) அளவுக்கு அதிகமாக இருக்கிறது. இந்தியாவில் இருந்து மெக்சிகோவுக்கு கார்கள், மோட்டார் சைக்கிள்கள் உள்பட மோட்டார் வாகனங்கள், எந்திரங்கள், ஜவுளி, இயற்கை ரசாயனங்கள், அலுமினியம் போன்றவை அதிக அளவில் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இந்தியா கடந்த ஆண்டு மட்டும் 1 லட்சம் கார்களை மெக்சிகோவுக்கு ஏற்றுமதி செய்திருக்கிறது..
அதேபோல் மெக்சிகோ நாட்டில் உள்ள கார் தயாரிக்கும் நிறுவனங்களுக்கு தேவையான உதிரி பாகங்களும் இந்தியாவில் இருந்தே அதிக அளவில் செல்கிறது. நாடாளுமன்றமான செனட்டில் இந்தியா, சீனா, தாய்லாந்து, இந்தோனேசியா உள்பட அனைத்து ஆசிய நாடுகளிலும் இருந்து மெக்சிகோவுக்கு இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 35 சதவீதம் முதல் 50 சதவீதம் வரை வரி விதிக்க திட்டமிட்டுள்ளது. இந்த வரிவிதிப்பு வருகிற ஜனவரி மாதம் முதல் அமலுக்கு வரும் நிலயில், . இந்த வரி விதிப்பால் சீனா அதிகம் பாதிக்கப்படாது என்கிறார்கள்.
ஏனெனில் மெக்சிகோ, சீனாவில் இருந்து அதிக பொருட்களை இறக்குமதி செய்ய பல்வேறு முதலீடுகள் செய்துள்ளது. அதன்பிறகு அங்கிருந்து மறுபடியும் அமெரிக்காவுக்கு பூஜ்ஜிய வரியில் ஏற்றுமதி செய்கிறது. இந்தியா அப்படி இல்லை.. ஏற்றுமதிக்கு தகுந்த இறக்குமதி இல்லை.. எனவே அமெரிக்காவை போல் வரிவிதிப்பை மெக்சிகோ அறிவித்திருக்கிறது.
-
பெட்ரோல் விலை 100க்கு கீழ் வருமா? மத்திய அரசின் வரி குறைப்பால் இந்தியாவில் என்ன நடக்க போகிறது? -
இந்தியர்களுக்கு குட்பை.. அமெரிக்காவிற்கே மூட்டையைக் கட்டிய பிரபல நிறுவனம்.. ஐடி ஊழியர்கள் ஷாக் -
இந்தியா மிஸ் செய்த பொக்கிஷம்.. இப்போ அமெரிக்காவே அலறுதே! கேம் சேஞ்சர் மிக்-35 -
அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட்! 8வது ஊதியக்குழு வந்தால்.. பண மழை! எவ்வளவு கிடைக்கும்னு பாருங்க -
"அலறிய அபாய சைரன்.." நடுக்கடலில் தத்தளிக்கும் இந்தியர்கள்.. கப்பல் மீது பாய்ந்த ஏவுகணை.. பதற்றம் -
இந்தியாவை கபளீகரம் செய்த சரிவு.. நிலைமை ரொம்ப மோசம்.. இது தொடர்ந்தால் டேஞ்சர் தான்! -
அந்த 3 கேள்விகள்! பதில் சொல்ல கூட முடியாமல் திணறல்! Starlink சேவையை இந்தியாவில் தொடங்குவதில் சிக்கல் -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
சரமாரியாக வந்த கேள்வி.. ஒரு நொடி ஸ்டன் ஆன ராகுல்.. "இந்தியா" ஆலோசனை கூட்டத்தில் நடந்தது என்ன? -
கிட்டத்தட்ட ரூ. 25 குறைவு! ஆனால் தப்பி தவறியும் "இந்த" பெட்ரோலை உங்க காரில் போடாதீங்க! ஏன் தெரியுமா -
“காங்கிரஸ் வளர்ச்சியால் அச்சம் வேண்டாம்”.. திருமாவளவன் குற்றச்சாட்டுக்கு மாணிக்கம் தாகூர் பதில் -
காங்கிரஸின் அணுகுமுறை இப்படித்தான் இருக்கும் என்றால்.. இந்தியா கூட்டணியை அதிர வைத்த ஜான் பிரிட்டோ எம்பி












Click it and Unblock the Notifications