இந்திய கார் கம்பெனிகளுக்கு பலத்த அடி.. மெக்சிகோ எடுத்த முடிவால் தலைக்கீழாக மாறும் நிலை!
டெல்லி: அரிய மண் காந்தங்கள் விஷயத்தில் சமீபத்தில் இந்திய கார் உற்பத்தி நிறுவனங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்தன. தற்போது இந்த பிரச்சனை ஓரளவுக்கு முடிவுக்கு வந்திருக்கும் நிலையில், தற்போது புதிய பிரச்சனை மெக்சிகோ வழியாக வந்திருக்கிறது. 50% வரை மெக்சிகோ வரியை விதிக்க இருப்பதால் இந்திய கார் உற்பத்தி நிறுவனங்கள் கடுமையான நெருக்கடியை எதிர்கொள்ள உள்ளன.
இந்த வரி அடுத்த ஆண்டு ஜனவரி 1ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. எந்தெந்த நாடுகளுடன் 'தடையற்ற வர்த்தக ஒப்பந்தம்' இருக்கிறதோ, அந்த நாடுகளை தவிர மற்ற நாடுகள் அனைத்துக்கும் 5-50% வரை விதிக்கப்படுவதாக மெக்சிகோ தெரிவித்திருக்கிறது. மெக்சிகோவுடன் இந்தியா தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தில் இல்லை. எனவே இந்தியாவுக்கும் வரி உண்டு. இந்தியா மட்டும் கிடையாது சீனாவும் இந்த ஒப்பந்தத்தில் இல்லை. எனவே சீனாவும் பாதிக்கப்படும்.

மெக்சிகோவுக்கு என்ன பிரச்சனை?
சீனாவை டார்கெட் செய்யவே இந்த வரியை மெக்சிகோ கொண்டு வருகிறது. அதாவது சீனாவிலிருந்து வாகன உதிரி பாகங்கள் உள்ளிட்டவை மலிவான விலையில் மெக்சிகோவுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. இந்த உதிரி பாகங்களை வாங்கி, அதை அசெம்பிள் செய்து அமெரிக்காவுக்கு அந்நாடு ஏற்றுமதி செய்கிறது. ஆக, சீனா மெக்சிகோ வழியாக எங்கள் நாட்டிற்குள் நுழைவதை நாங்கள் அனுமதிக்க மாட்டோம் என்று டிரம்ப் கூறியுள்ளார். சீனாவுக்கு எதிராக நடவடிக்கையை நாங்கள் எடுப்பதற்குள் மெக்சிகோ உஷாராக வேண்டும் என்றும் எச்சரித்திருந்தார். இதனையடுத்து தற்போது புதிய வரி போடப்பட உள்ளது.
அமெரிக்காவின் நெருக்கடி
மற்றொரு காரணம் அமெரிக்கா-மெக்சிகோ வர்த்தக ஒப்பந்தம் 2026-ல் மறுபரிசீலனைக்கு வரவுள்ளது. சீனாவை காரணம் காட்டி அமெரிக்கா மெக்சிகோவை கழற்றிவிடலாம். எனவே அதற்கு முன்னதாகவே சீனாவுக்கு செக் வைக்கும் விதமாக வரி நடவடிக்கையை மெக்சிகோ மேற்கொண்டிருக்கிறது. சீனாவின் செல்வாக்கைக் கட்டுப்படுத்துவதில் அமெரிக்காவுடன் துணை நிற்பேன் என்பதை வாஷிங்டனுக்கு தெளிவாக உணர்த்தவே மெக்சிகோ இந்த நடவடிக்கையில் இறங்கியிருக்கிறது.
இந்தியாவுக்கு பாதிப்பு
சரி இதெல்லாம் ஒகேதான், ஆனால் இதனால் பாதிக்கப்படப்போவது சீனா மட்டும் கிடையாது. இந்தியாவுக்கு, குறிப்பாக இந்திய ஆட்டோமொபைல் துறைக்கு கடுமையான பாதிப்பு ஏற்படும். 2024 ஆம் ஆண்டில் இந்தியா மெக்சிகோவுக்கு 5.3 பில்லியன் டாலர்(47,920 கோடி ரூபாய்) மதிப்புள்ள பொருட்களை ஏற்றுமதி செய்துள்ளது, இதில் கார்கள் மட்டும் சுமார் 1 பில்லியன் டாலர்(9,041 கோடி ரூபாய்) மதிப்புடையவை. இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் கார்களை அதிக அளவில் இறக்குமதி செய்யும் நாடுகளின் பட்டியலில் மெக்சிகோ 3வது இடத்தில் இருக்கிறது.
ஆட்டோமொபைல்
ஏற்கெனவே 20% வரி இந்தியா மீது இருக்கிறது. இந்நிலையில் மேலும் 50% வரி எனில் கார் ஏற்றுமதி லாபகரமானதாக இருக்காது. ஸ்கோடா ஆட்டோ நிறுவனம் இந்தியாவின் மொத்த கார் ஏற்றுமதியில் கிட்டத்தட்ட 50% மெக்சிகோவுக்கு செய்கிறது. ஹூண்டாய் சுமார் 200 மில்லியன் டாலர் (1,808 கோடி ரூபாய்) மதிப்புள்ள கார்களையும், நிஸ்ஸான் 140 மில்லியன் டாலர் (1,266 கோடி ரூபாய்) மதிப்புள்ள கார்களையும், சுஸுகி 120 மில்லியன் டாலர் (1,085 கோடி ரூபாய்) மதிப்புள்ள கார்களையும் ஏற்றுமதி செய்கிறது. ராயல் என்பீல்டு, டிவிஎஸ், பஜாஜ் மற்றும் ஹோண்டா போன்ற இருசக்கர வாகன நிறுவனங்களும் மெக்சிகோவுக்கு ஏற்றுமதி செய்து வருகின்றன.
டாடா ஸ்டீல்
ஆண்டுக்கு சுமார் 600 முதல் 700 மில்லியன் டாலர்(6,329 கோடி ரூபாய்) மதிப்புள்ள வாகன உதிரிபாகங்கள், 25% முதல் 50% வரையிலான வரிவிதிப்பால் பாதிக்கப்படும். ஆண்டுக்கு சுமார் 900 மில்லியன் டாலர்(8,137 கோடி ரூபாய்) மதிப்புள்ள இரும்பு மற்றும் எஃகு ஏற்றுமதிகள் இப்போது 35% முதல் 40% வரையிலான வரியைச் சந்திக்கும், இது டாடா ஸ்டீல் போன்ற நிறுவனங்களுக்குக் கடுமையான அடியாக இருக்கும்.
மருந்து பொருட்கள்
ஆட்டோமொபைல் துறை மட்டுமல்லாது, சுமார் 500 முதல் 600 மில்லியன் டாலர் (5,425 கோடி ரூபாய்) மதிப்புள்ள ஜவுளி, ஆடை மற்றும் காலணி ஏற்றுமதியும் இந்த வரியால் பாதிப்புக்கு உள்ளாகும். வரி காரணமாக உயர் ரக, குறிப்பிட்ட சந்தைப் பொருட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும். சுமார் 400 மில்லியன் டாலர் (3,616 கோடி ரூபாய்)மதிப்புள்ள கரிம ரசாயனங்கள் மற்றும் மருந்துப் பொருட்கள் ஏற்றுமதியும் கடுமையாக பாதிக்கும்.
மொத்தத்தில், கடந்த ஆண்டு இந்தியா மெக்சிகோவுக்கு கிட்டத்தட்ட 8.9 பில்லியன் டாலர் (80,470 கோடி ரூபாய்) மதிப்புள்ள பொருட்களை ஏற்றுமதி செய்தது. ஆனால், புதிய வரி மேற்குறிப்பிட்ட துறைகளில் 25% முதல் 40% வரை சரிவை ஏற்படுத்தக்கூடும் என அஞ்சப்படுகிறது.
-
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை












Click it and Unblock the Notifications