மலேசிய விமானம் எம்.ஹெச். 17 எப்படி வெடித்துச் சிதறியது?: வீடியோ இதோ
ஆம்ஸ்டர்டாம்: உக்ரைன் வான்வெளியில் பறந்த மலேசிய விமானத்தை பக் ஏவுகணை வீசித் தாக்கியதால் தான் அது வெடித்துச் சிதறியது என்று விசாரணையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் எம்.ஹெச். 17 298 பேருடன் நெர்தர்லாந்து தலைநகர் ஆம்ஸ்டர்டாமில் இருந்து கடந்த ஆண்டு ஜூலை மாதம் 17ம் தேதி மலேசிய தலைநகர் கோலாலம்பூருக்கு கிளம்பியது. விமானம் கிழக்கு உக்ரைனில் பறந்து கொண்டிருக்கையில் பக் ஏவுகணை வீசித் தாக்கப்பட்டதால் வெடித்துச் சிதறியது. இதனால் விமானத்தில் இருந்த அனைவரும் பலியாகினர்.
விமானத்தை உக்ரைனில் உள்ள ரஷ்ய ஆதரவுப்படையினர் தாக்கியதாக உக்ரைனும், உக்ரைன் தாக்கியதாக ரஷ்யாவும் தெரிவித்து வருகிறது. விமானத்தை ரஷ்ய ஆதரவுப்படையினர் தான் தாக்கியிருக்கக்கூடும் என்று நிபுணர்களும், அமெரிக்காவும் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் நெதர்லாந்து தலைமையிலான பன்னாட்டு விசாரணைக்குழு தனது இறுதி அறிக்கையை வெளியிட்டது. அதில் கூறப்பட்டிருந்ததாவது,
மலேசிய விமானம் உக்ரைனில் 33 ஆயிரம் அடி உயரத்தில் பறக்கையில் பக் ஏவுகணை வீசித் தான் தாக்கப்பட்டது. பக் ஏவுகணை விமானியின் அறை அருகே விமானத்தின் இடப்பக்கம் தாக்கியது. இதில் விமானத்தின் முன் பகுதி உடைந்தது. விமானம் நடுவானில் உடைந்து சிதறியது. அதில் பெரும் பகுதி ரஷ்ய ஆதரவுப்படையினர் பிடியில் உள்ள இடத்தில் விழுந்தது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்த கற்பனை வீடியோவையும் விசாரணை குழு வெளியிட்டுள்ளது.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications