ஷியா மதகுரு விவகாரம்: ஈரானுக்கான தூதரை வாபஸ் பெறும் குவைத்
குவைத்: சவுதியில் ஷியா பிரிவு மத குருவுக்கு மரண தண்டனை அளிக்கப்பட்டதற்கு ஈரான் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இந்நிலையில் ஈரானுக்கான தனது தூதரை குவைத் திரும்பப் பெறுகிறது.
சவுதி அரசை கடுமையாக விமர்சித்து வந்த ஷியா பிரிவு தலைவர் ஷேக் நிமிர் அல் நிமிர் உள்பட 47 பேருக்கு சவுதியில் கடந்த சனிக்கிழமை மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. ஷேக்கிற்கு மரண தண்டனை விதிக்கப்பட்டதை கண்டித்து ஈரான் தலைநகர் தெஹ்ரானில் உள்ள சவுதி தூதரகத்தை உள்ளூர் மக்கள் சேதப்படுத்தினர். இதையடுத்து சவுதி அரேபியா ஈரானுடனான உறவை துண்டித்துள்ளது.

ஷேக் ஈரானுக்கு மிகவும் நன்றியுள்ளவராக இருந்த தீவிரவாதி என்று சவுதி அரசு கருதியது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் ஈரானுக்கான தனது தூதரை குவைத் அரசு திரும்பப் பெறுகிறது.
சவுதியில் உள்ள சன்னி முஸ்லீம்களுக்கும், ஈரானில் உள்ள ஷியா முஸ்லீம்களும் எதிரும் புதிருமாக உள்ளவர்கள். சிரியா மற்றும் ஏமனில் நடக்கும் பிரச்சனைகளிலும் அவர்கள் எதிர் எதிர் அணியில் உள்ளனர்.
சவுதியில் உள்ள சன்னி முஸ்லீம்கள் ஷியா முஸ்லீம்களை இரண்டாம் தர குடிமக்களாகவே கருதுவதாக குற்றச்சாட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
-
போங்க தம்பி.. டிரம்ப்-க்கு மீண்டும் பல்பு கொடுத்த ஈரான்.. அடுத்தது என்ன நடக்கும்? -
"டார்க்" பாதை.. ஹார்முஸ் ஜலசந்தி வழியாக சீக்ரெட்டாக போன 70+ கப்பல்கள்.. இது எப்படி சாத்தியம்? -
Kuwait மீது திடீர் தாக்குதல் நடத்திய ஈரான்.. திரும்பும் பக்கமெல்லாம் ஏவுகணை சந்தம்.. பீதியில் மக்கள்! -
ஈரானின் முதுகெலும்பில் தாக்கிய CENTCOM.. டிரம்ப் போட்டுக்கொடுத்த பிளான்..? கச்சிதமாக முடித்த US Army! -
பைத்தியக்காரனா நீ? நெதன்யாகுவை திட்டி தீர்த்த டிரம்ப்.. இஸ்ரேல் செய்த வேலையால் ஈரான் எடுத்த முடிவு! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக!












Click it and Unblock the Notifications