கண்கள் சிவந்த இஸ்ரேல் பிரதமர்.. உடனே பாய்ந்த ஏவுகணைகள்.. ஆடிப்போன ஹிஸ்புல்லா.. என்ன நடந்தது?
டெல் அவிவ்: இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு மீது ஹிஸ்புல்லா தாக்குதல் நடத்திய நிலையில், அதற்கு இப்போது இஸ்ரேல் பதிலடி கொடுக்க தொடங்கியுள்ளது. ஒரே நேரத்தில் லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா மீதும், காசாவில் உள்ள ஹமாஸ் படை மீதும் இஸ்ரேல் இப்போது தாக்குதலை நடத்தி இருக்கிறது.
மத்திய கிழக்கில் இப்போது நிலைமை ரொம்ப மோசமாக இருக்கிறது. ஒரு பக்கம் இஸ்ரேல் ஹமாஸ் இடையேயான போர் தீவிரமடைந்துள்ளது. சமீபத்தில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஹமாஸ் தலைவர் சின்வார் கொல்லப்பட்டார்.

ஹிஸ்புல்லா: இதை மேற்குலக நாடுகள் வரவேற்றாலும் கூட ஹிஸ்புல்லா மற்றும் ஈரான் நாடுகள் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. குறிப்பாக இஸ்ரேல் மீதான தங்கள் தாக்குதலைத் தீவிரப்படுத்துவோம் என்று ஹிஸ்புல்லா அறிவித்து இருந்தது. சொன்னபடியே நேற்று இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு வீட்டின் மீது டிரோன் தாக்குதல் நடந்துள்ளது.. 3 டிரோன்கள் வீட்டை நோக்கி வந்த நிலையில், 2 டிரோன்கள் சுட்டு வீழ்த்தப்பட்டது.
ஒரு டிரோன் இஸ்ரேல் பிரதமர் வீட்டில் பயங்கர சத்தத்துடன் மோதியிருக்கிறது. நல்வாய்ப்பாக இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இந்த தாக்குதலால் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு கொந்தளித்தார். இப்படிச் செய்தால் இஸ்ரேல் தனது சண்டையை நிறுத்தும் என ஒருபோதும் நினைக்க வேண்டாம் என்ற அவர், இஸ்ரேல் மக்களைக் காப்பாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் இந்த தாக்குதலுக்கு மிகப் பெரிய விலையைக் கொடுக்க நேரிடும் என்றும் எச்சரித்தார்.
இஸ்ரேல் பிரதமர் மீது கொலை முயற்சி.. உடனே ஈரான் கொடுத்த பதில்.. உச்சக்கட்ட பதற்றம்! என்ன நடக்கிறது?
பதிலடி: அதேநேரம் இந்தத் தாக்குதலுக்கும் தனக்கும் தொடர்பு இல்லை என்று ஈரான் கூறிவிட்டது. இஸ்ரேல் பிரதமர் இல்லத்தைக் குறிவைத்து ஹிஸ்புல்லா தன்னிச்சையாகத் தாக்குதல் நடத்தியிருப்பதாகவும் இதற்கும் தங்களுக்கும் தொடர்பு இல்லை என்றும் ஈரான் கூறியிருக்கிறது.
இதற்கிடையே ஹிஸ்புல்லாவின் இந்தத் தாக்குதலுக்குப் பதிலடி தரும் நடவடிக்கையில் இஸ்ரேல் இறங்கியுள்ளது. லெபனானில் உள்ள ஹிஸ்புல்லாவை குறிவைத்தும், காசாவில் உள்ள ஹமாஸை குறிவைத்தும் இஸ்ரேல் தனது தாக்குதலைத் தீவிரப்படுத்தியுள்ளது. குறிப்பாக லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் உள்ள ஹிஸ்புல்லா கட்டளை மையத்தின் மீது இஸ்ரேல் நேரடியாகத் தாக்குதல் நடத்தியுள்ளது.
1 வீரருக்கு பதிலாக.. வளைந்து கொடுத்து.. 1000 கைதிகளை விடுவித்த இஸ்ரேல்.. அதில் ஒருவர்தான் சின்வார்!
தாக்குதல்: பெய்ரூட்டில் உள்ள ஹிஸ்புல்லா உளவுத்துறை தலைமையகத்தின் கட்டளை மையத்தைக் குறிவைத்து இஸ்ரேல் தாக்குதல் நடத்தியுள்ளது. மேலும், ஹிஸ்புல்லா எந்த சுரங்கத்தில் ஆயுதங்களைப் பதுக்கி வைத்துள்ளனர் என்பதைக் கண்டறிந்தும் இஸ்ரேல் தாக்குதல் நடத்தியுள்ளது. இதில் மொத்தம் 3 ஹிஸ்புல்லா வீரர்கள் கொல்லப்பட்டுள்ளதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
அதேநேரம் லெபனான் இதற்கு நேர்மாறான செய்தியையே வெளியிட்டுள்ளது. அதாவது லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் இஸ்ரேல் நடத்திய ஏவுகணை தாக்குதல் தாக்குதல்கள் மசூதி மற்றும் மருத்துவமனைக்கு அருகிலுள்ள ஹரேட் ஹ்ரீக்கில் என்ற குடியிருப்பு கட்டிடத்தையே தாக்கியதாக லெபனான் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காசா: லெபானில் உள்ள ஹிஸ்புல்லாவை போலவே காசாவில் உள்ள ஹமாஸ் மீதான தாக்குதலையும் இஸ்ரேல் தீவிரப்படுத்தியிருக்கிறது. அதேநேரம் இஸ்ரேல் அனுப்பிய ஏவுகணைகளில் ஒன்று குடியிருப்பு கட்டிடத்தைத் தாக்கியதாகவும் இதில் ஒரே தாக்குதலில் 73 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டதாகவும் காசா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் இப்படி மோதல் தொடர்வதால் இழப்புகள் தொடர்ந்து அதிகரிக்கும் நிலையில், சண்டையை முடிவுக்குக் கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பலரும் வலியுறுத்தி வருகிறார்கள்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது!












Click it and Unblock the Notifications