இஸ்ரேல் மீது அணு குண்டு? ஈரானில் திடீரென எழுந்த குரல்.. இதுதான் 3ம் உலக போரின் தொடக்கமா? பகீர்
தெஹ்ரான்: ஹமாஸ், ஹிஸ்புல்லா, ஹவுதி என்று எதிரிகளாகக் கருதும் அனைத்து தரப்பினர் மீதும் இஸ்ரேல் தாக்குதலைத் தொடங்கியுள்ள நிலையில், இஸ்ரேல் மீது அணு ஆயுத தாக்குதலை நடத்த வேண்டும் என்று குரல்கள் எழுந்துள்ளன. இதற்கான வாய்ப்பு குறைவு என்ற போதிலும் நடந்தால் அது 3வது உலகப் போரைத் தொடங்கும் என்பதில் சந்தேகமே இல்லை.
மத்திய கிழக்குப் பகுதியில் இப்போது பதற்றமான ஒரு சூழலே நிலவி வருகிறது. முதலில் இஸ்ரேல் மீதான தாக்குதலுக்குப் பதிலடி தரும் வகையில் அந்நாட்டின் பிரதமர் நெதன்யாகு காசாவில் உள்ள ஹமாஸ் மீது போரை அறிவித்தார்.

இஸ்ரேல் தாக்குதல்: இந்த போரே முடியாமல் பல ஆண்டுகளாகத் தொடர்ந்து வருகிறது. இதற்கிடையே கடந்த சில நாட்களுக்கு முன்பு லெபனானில் உள்ள ஈரான் ஆதரவு பெற்ற ஹிஸ்புல்லா அமைப்பின் மீது இஸ்ரேல் தாக்குதலைத் தொடர்ந்தது. அத்துடன் நில்லாமல் நேற்று ஏமனில் உள்ள ஹவுதி படை மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. இப்படி தனது எதிரிகள் மீது ஒரே நேரத்தில் தீவிர தாக்குதலில் இஸ்ரேல் இறங்கியுள்ளது.
ஹிஸ்புல்லா அமைப்பினர் மீது சமீபத்தில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் அந்த அமைப்பினர் தலைவர் ஹசன் நஸ்ரல்லா படுகொலை செய்யப்பட்டார். இந்த தகவலை இஸ்ரேல் தரப்பும், ஹிஸ்புல்லாவும் உறுதி செய்துள்ளது. இதற்கிடையே இஸ்ரேலுக்குப் பதிலடி தர வேண்டும் என்ற கோரிக்கை ஈரானில் அதிகரித்துள்ளது. இஸ்ரேல் மீது மிகக் கடுமையான நடவடிக்கை வேண்டும் என்றும் ஈரானில் பலரும் வலியுறுத்தி வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
கடும் கோபம்: குறிப்பாக ஈரான் நாட்டின் அடிப்படைவாதிகளே காட்டமான கருத்துகளைத் தெரிவித்து வருகிறார்கள். தற்போது ஈரானில் ஆட்சியில் உள்ள மசூத் பெசெஷ்கியானின் அரசு, காசா மற்றும் லெபனானில் இஸ்ரேலின் தாக்குதலுக்கு பதிலடி தராமல் செயலற்றதாக இருப்பதாகப் பலரும் குற்றம் சாட்டினர். அதேநேரம் இஸ்ரேலின் ராணுவம் என்பது அதிபராக உள்ள மசூத் பெசெஷ்கியானின் கட்டுப்பாட்டில் வராது. அது நேரடியாக அந்நாட்டின் உச்சபட்ச தலைவரான அலி கமேனியிடம் உள்ளது குறிப்பிடத்தக்கது
நஸ்ரல்லாவின் மரணத்திற்கு ஈரான் உச்சபட்ச தலைவரான அலி கமேனி கடும் கண்டனம் தெரிவித்தார். உலகெங்கும் உள்ள முஸ்லிம்கள் லெபனான் மக்கள் மற்றும் ஹிஸ்புல்லா அமைப்பிற்குத் துணை நிற்க வேண்டும் என வலியுறுத்தினார். அதேநேரம் இஸ்ரேல் மீதான தாக்குதல் அல்லது பதிலடி குறித்து எந்தவொரு தகவலும் அதில் இல்லை.
அணுகுண்டு: இதற்கிடையே இஸ்ரேலுக்கு மிகக் கடுமையான பதிலடி தர வேண்டும் என வலியுறுத்தும் அடிப்படைவாதிகள் பலரும் அணுகுண்டை பயன்படுத்த வேண்டும் என்ற பகீர் கருத்துகளையும் கூறியுள்ளனர். அங்குள்ள பல்கலைக்கழக பேராசிரியர் சோஹ்ராப் சலேஹி, "ஈரான் தன்னிடம் உள்ள அனைத்து வாய்ப்புகளையும் இழந்துவிட்டது. இப்போது கிடைக்கும் ஒரே வாய்ப்பு அணுகுண்டு மட்டுமே.. மேற்குலக நாடுகளைப் பேச்சுவார்த்தைக்குக் கொண்டு வர அதுவே ஒரே வழி" என்று கூறியுள்ளார்.
அவரது இந்த கருத்து இணையத்தில் பெரும் பரபரப்பை உருவாக்கியுள்ளது. ஒரு தரப்பினர் அணு ஆயுதத்தைப் பயன்படுத்திப் பார்க்கலாம் என சொன்னாலும் பலரும் அதை எதிர்த்தே வருகிறார்கள். அது உலக நாடுகளின் கோபத்தை ஈரான் பக்கம் திருப்பும் என்றும் அதன் பின் நியாயம் யார் பக்கம் என்பது தெரியாமலேயே போய்விடும் என்றும் கூறி வருகிறார்கள்.
வாய்ப்பு கம்மி: இது மட்டுமின்றி இஸ்லாமியக் கோட்பாடுகளைத் தீவிரமாகப் பின்பற்றும் நபராகவே உச்சபட்ச தலைவரான அலி கமேனி அறியப்படுகிறார். இஸ்லாமியக் கோட்பாடுகள் அணு ஆயுதங்கள் உட்படப் பேரழிவு ஆயுதங்களின் பயன்பாட்டிற்கு எதிராக உள்ளதால் அலி கமேனி அணு ஆயுதங்களைப் பயன்படுத்த மாட்டார் என்றே கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications