இந்தியாவுடன் ரபேல் ஒப்பந்தம் செய்ய.. இடைத்தரகருக்கு பல கோடி லஞ்சம்: பிரான்ஸ் ஊடகம் குற்றச்சாட்டு
பாரிஸ்: இந்தியாவுடன் ரபேல் ஒப்பந்தத்தை மேற்கொள்வதற்காக டாஸ்ஸால்ட் நிறுவனம் 650 மில்லியன் ரூபாய் லஞ்சம் கொடுத்தாகவும், அதை பற்றி தெரிந்தும் கூட சிபிஐ விசாரிக்கவில்லை என்றும் பிரான்ஸ் ஊடகம் ஒன்று குற்றஞ்சாட்டி உள்ளது.
பிரான்ஸ் நிறுவனமான டாஸ்ஸால்ட் நிறுவனத்திடம் இருந்து ரபேல் விமானங்களை இந்தியா வாங்க ஒப்பந்தம் செய்ததில் இருந்தே அதில் பல சர்ச்சைகள் நிலவி வருகின்றன. முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சியிலேயே ரபேல் விமானங்களை வாங்க டாஸ்ஸால்ட் நிறுவனத்திடம் ஒப்பந்தம் செய்யப்பட்டுவிட்டது.
ஆனாலும் 2014ல் ஆட்சி மாறிய பின் டாஸ்ஸால்ட் நிறுவனத்தின் 36 ரபேல் விமானங்களுக்கான ஒப்பந்தத்தில் சில மாற்றங்கள் செய்யப்பட்டது. முக்கியமான ரிலையன்ஸ் டிபன்ஸ் நிறுவனம் இதில் இந்திய உற்பத்தியாளராக சேர்க்கப்பட்டது. இந்த ரபேல் போர் விமான ஒப்பந்தத்தில் முறைகேடு நடந்துள்ளதாக காங்கிரஸ் குற்றஞ்சாட்டி இருந்தது.

வழக்கு
விமானங்களை கூடுதல் விலைக்கு வாங்கியதாக காங்கிரஸ் கூறியது. இந்த 59000 கோடி ரூபாய் ஒப்பந்தத்தில் முறைகேடு இருப்பதாக காங்கிரஸ் குற்றஞ்சாட்டி பல்வேறு மனுக்கள் மூலம் உச்ச நீதிமன்றத்தில் வழக்கும் தொடுத்தது. ஆனால் உச்ச நீதிமன்றம் இந்த வழக்கில் நீதி விசாரணை நடத்த மறுத்துவிட்டது.

நீதி விசாரணை
இந்த நிலையில்தான் பல்வேறு பிரான்ஸ் ஊடகங்கள் ரபேல் ஒப்பந்தத்தில் லஞ்சப்பணம் கைமாறி இருப்பதாகவும், ஊழல் நடந்து இருப்பதாகவும் குற்றச்சாட்டு வைத்தது. இதனால் பிரான்சில் தற்போது ரபேல் ஒப்பந்தம் குறித்து அந்நாட்டு நிதி சட்ட ஆணையம் நீதி விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளது. இந்த நிலையில்தான் டாஸ்ஸால்ட் நிறுவனம் ரபேல் விமானங்களை இந்தியாவிடம் விற்கும் ஒப்பந்தத்திற்காக பல கோடி லஞ்சம் கொடுத்ததாக குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளது.

பிரான்ஸ்
பிரான்ஸ் செய்தி நிறுவனமான மீடியாபார்ட் இது தொடர்பான குற்றச்சாட்டை வைத்துள்ளது. அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள கட்டுரை மற்றும் கோப்புகளில், டாஸ்ஸால்ட் நிறுவனம் இந்தியாவுடன் இந்த ஒப்பந்தத்தை மேற்கொள்வதற்காக 650 மில்லியன் ரூபாய் லஞ்சம் கொடுத்துள்ளது. சுஷன் குப்தா என்ற இடைத்தரகருக்கு இந்த லஞ்சம் கொடுக்கப்பட்டதாக புகார் வைக்கப்பட்டுள்ளது.
Recommended Video

பொய்
பொய்யான இன்வாய்ஸ் மூலம் மொரீஷியசில் இருக்கும் Intersteller Technologies என்ற பொய்யான நிறுவனத்தின் பெயரில் இந்த லஞ்ச பணம் கைமாறியதாகவும் மீடியாபார்ட் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான பண பரிவர்த்தனை விவரங்களை அந்த மீடியாபார்ட் ஊடகம் வெளியிட்டுள்ளது. அதேபோல் இது தொடர்பான ஆவணங்கள் 2018லேயே சிபிஐ அமைப்பிற்கும், அமலாக்கத்துறைக்கும் கிடைத்துள்ளதாக மீடியாபார்ட் தெரிவித்துள்ளது.

விஐபி
அதன்படி விஐபி ஹெலிகாப்டர்கள் வாங்கிய ஊழலை விசாரிக்கும் போது சுஷன் குப்தாவின் முறைகேடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அகஸ்ட்டா வெஸ்ட்லேண்ட் நிறுவனத்திற்கு விஐபி ஹெலிகாப்டர்கள் வாங்கிய போதும் இவர்தான் இடைத்தரகராக செயல்பட்டுள்ளார். அந்த கோப்புகள் சிபிஐக்கு 2018ல் கிடைத்துள்ளது. அதே சமயத்தில்தான் ரபேல் ஒப்பந்தத்தில் குப்தா இடைத்தரகராக லஞ்சம் வாங்கியதும் சிபிஐ, அமலாக்கத்துறை மூலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. விஐபி ஹெலிகாப்டர் கோப்புகள் கிடைத்த போது ரபேல் கோப்புகளும் கிடைத்துள்ளது.

சிபிஐ
ஆனால் ரபேல் ஒப்பந்தத்திற்கு குப்தா இடைத்தரகராக லஞ்சம் பெற்ற தகவல்கள் இருந்தும் இதில் இந்திய விசாரணை அமைப்புகள் எந்த விசாரணையும் நடத்தவில்லை என்று மீடியாபார்ட் தனது செய்தியில் குறிப்பிட்டுள்ளது. 2014க்கு முன் காங்கிரஸ் ஆட்சியிலேயே ஒப்பந்தம் செய்யப்பட்டாலும், சந்தேகத்திற்கு உரிய பண பரிவர்த்தனை 2015க்கு பின் பாஜக ஆட்சியில்தான் செய்யப்பட்டதாக மீடியாபார்ட் குற்றஞ்சாட்டி உள்ளது.

மீடியாபார்ட்
இதற்கான இன்வாய்ஸ்களை மீடியாபார்ட் வெளியிட்டுள்ளது. அதன்படி இந்தியாவுடன் ரபேல் ஒப்பந்தத்தை மேற்கொள்வதற்காக டாஸ்ஸால்ட் நிறுவனம் இடைத்தரகர் குப்தாவிற்கு 650 மில்லியன் டாலர் லஞ்சம் கொடுத்தாக இதில் குறிப்பிட்டுள்ளது. இதற்கான இன்வாய்ஸ், பண பரிவர்த்தனை விவரங்களை அந்த மீடியாபார்ட் செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது. ஆனால் இந்த தகவல்கள் இன்னும் உறுதிப்படுத்தப்படாத காரணத்தால் இதன் உண்மைத்தன்மை குறித்த சந்தேகம் நிலவுகிறது. ரபேல் ஒப்பந்தத்தில் முறைகேடு நடந்ததற்கான முகாந்திரம் இல்லை என்று உச்ச நீதிமன்றம் இந்த வழக்கை ஏற்கனவே தள்ளுபடி செய்தது குறிப்பிடத்தக்கது.
-
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட்












Click it and Unblock the Notifications