லிபியா அருகே அகதிகள் சென்ற படகு கவிழ்ந்த விபத்தில் 25 பேர் பலி..400 பேர் உயிருடன் மீட்பு..பலர் மாயம்
ரோம் : லிபியாவிலிருந்து புலம் பெயர்ந்து அகதிகளாக ஐரோப்பாவுக்கு வந்தவர்களின் படகு கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானதில் 25 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். அவர்களது உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.
கடலில் தத்தளித்த 400 பேர் உயிருடன் மீட்கப்பட்டனர். பலர் மாயமானதால் பலியானவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது.

சுமார் 600 பேருக்கும் மேற்பட்டவர்களுடன் லிபியாவில் இருந்து கடத்தல்கார்களின் படகில் கிளம்பியவர்களின் படகு லிபியா அருகே மத்திய தரைக்கடலில் சென்ற போது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.
விபத்திற்கான முழுமையான காரணம் இதுவரை தெரியவில்லை. தகவல் அறிந்த இத்தாலியை சேர்ந்த கப்பல்கள் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றன.
உயிருடன் 400 பேர் மீட்கப்பட்டுள்ளதால், மீதமுள்ளவர்களின் கதி என்ன என்பது குறித்து தகவல்கள் வெளியாகவில்லை. இதனால் பலி எண்ணிக்கை உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது.
மூழ்கியவர்களைத் தேடும் பணியில் 3 கப்பல்கள், ஹெலிகாப்டர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
இதுபோல் விபத்து நடப்பது இது முதல் முறை அல்ல. நடப்பாண்டில் மட்டும் கடலில் ஆபத்தான பயணம் மேற்கொண்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2000 ஐக் கடந்துவிட்டது.
ஆப்பிரிக்கா மற்றும் கிழக்கு ஆசியா நாடுகளில் நடைபெறும் உள்நாட்டு போர் மற்றும் வறுமை காரணமாக பலர் பிழைப்பு தேடி ஐரோப்பாவிற்கு ஆபத்தான கடல் பயணத்தை மேற்கொள்ளும் போது விபத்தில் சிக்கி உயிரிழந்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications