ஆயிரமாண்டு பழமையான கோயில் வங்கதேசத்தில் கண்டெடுப்பு!
டாக்கா: வங்காளதேசத்தில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய பழமை வாய்ந்த இந்து கோவிலை தொல்பொருள் ஆராய்ச்சியினர் கண்டுபிடித்திருக்கிறார்கள்.
மெகர்பூர் கிராமத்தை சேர்ந்த விவசாயிகள் சிலர் தங்கள் நிலத்தில் உழுது கொண்டிருந்த போது பழங்காலத்து செங்கற்கள் தென்படுவதை கண்டு ஆச்சர்யமடைந்தனர். தொடர்ந்து, தோண்டி பார்த்த போது அங்கே பல தொன்மையான பொருட்கள் கிடைத்தது.

இதுபற்றி கிராமம் முழுவதும் தகவல் பரவியது. தகவலறிந்த, அரசு அதிகாரிகள் விவசாயிகளுக்கு குத்தகைக்கு விடப்பட்டிருந்த அந்த நிலத்தை ஜஹான்கிர்நகர் பல்கலைக்கழக தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் உதவியுடன் அகழ்வாராய்ச்சி செய்தனர்.
அதில், மிகப்பழமை வாய்ந்த இந்து கோவிலின் படிக்கட்டுகளும், எரிந்த நிலையில் காணப்படும் சுவர்களும் தென்பட்டன. தொடர்ந்து தோண்டி பார்த்ததில் அக்கோவில் வைக்கப்பட்டிருந்த கடவுள் உருவச் சிலைகள் கிடைத்தன.
சென் வம்சத்தினர் ஆட்சியின் போது பலால் சென் என்ற மன்னரால் 12வது நூற்றாண்டில் தாக்கேஸ்வரி கோவில் கட்டப்பட்டது. அந்த கோவில்தான் வங்காளதேசத்தின் மிகப்பழமையான இந்து கோவிலாகும். அதன் நினைவாகவே, தலைநகருக்கு டாக்கா என பெயரிடப்பட்டதாக கூறப்படுகிறது.
-
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் வைகாசி மாத பிரம்மோற்சவம்.. தங்கக் கருட வாகனத்தில் காட்சி! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications