காணாமல் போன இளைஞர் - மலைப்பாம்பின் வயிற்றில் சடலமாக மீட்பு.. இந்தோனேஷிய பயங்கரம் - வீடியோ
இந்தோனேஷியாவில் மாயமான இளைஞர் ஒருவர் மலைப்பாம்பின் வயிற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சுலவேசி: இந்தோனேஷியாவில் மாயமான இளைஞர் ஒருவர் மாலைப்பாம்பின் வயிற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மலைப்பாம்பின் வயிற்றை கிழித்து இளைஞரின் சடலம் மீட்க்கப்படும் வீடியோ காட்சி வைரலாக பரவி வருகிறது.
இந்தோனேஷிய நாட்டின் சுலவேசி தீவைச் சேர்ந்த 25 வயது வாலிபர் அக்பர் சலுபிரோ தனது தோட்டத்தில் விவசாய பணியில் ஈடுபட்டிருந்தார். பணிக்குச் சென்ற அக்பர் வீட்டிற்கு திரும்பாததால் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் அவரைத் தேடி அலைந்துள்ளனர்.

இந்நிலையில், அக்பரின் வீட்டிற்கு பின்புறம் உள்ள தோட்டத்தில், பெரிய மலைப் பாம்பு ஒன்று வயிறு வீங்கிய நிலையில் காணப்பட்டது. சந்தேகமடைந்த உறவினர்கள் 7 மீட்டர் நீளமுள்ள அந்த பாம்பின் வயிற்றை கிழித்தபோது, அதில் காணாமல் போன அக்பர் சடலமாக இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
வீடியோ
அக்பர் தோட்டப் பணியில் ஈடுபட்டிருந்தபோது அவரை மலைப்பாம்பு விழுங்கியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அக்பரின் உடலை மலைபாம்பின் வயிற்றில் இருந்து எடுக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications