நாகாலாந்தில் தம்பதி சுட்டுக் கொலை: கார்கள், வீடுகளை எரித்த கும்பல்
கோஹிமா: நாகாலாந்தில் ஒரு தம்பதி கொலை செய்யப்பட்டுக் காரில் கிடந்ததை பார்த்த கும்பல் கலவரத்தில் ஈடுபட்டது.
நாகாலாந்து மாநிலம் ட்யூன்சாங் மாவட்டத்தில் உள்ள ஷமடார் கிராமத்தில் நர்ஸாக வேலை பார்த்து வந்தவர் நாரோ. அவரது கணவர் அலெம்பா. கிபைர் மாவட்டத்தில் உள்ள துவக்கப் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றினார். அவர்களுக்கு நான்கு குழந்தைகள் உள்ளனர்.
இந்நிலையில் நேற்று அலெம்பா மற்றும் நாரோ கார் ஒன்றில் ஷமடாரில் இருந்து கிபைருக்கு சென்றனர். அப்போது ஷமடாரில் இருந்து 20 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பகுதியில் செல்கையில் அவர்கள் காரை நோக்கி யாரோ துப்பாக்கிகளால் சுட்டதில் இருவரும் பலியாகினர்.
இது குறித்து தகவல் கிடைத்ததும் கிபைரில் ஒரு கும்பல் வன்முறையில் ஈடுபட்டது. அந்த தம்பதி கொல்லப்பட்டதை கண்டித்து அந்த கும்பல் 5 வாகனங்களை தீ வைத்து எரித்ததுடன் 3 வீடுகளையும் எரித்தது. மேலும் பல வாகனங்கள், வீடுகளை சேதப்படுத்தியது.
இதையடுத்து அப்பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அப்படியும் அந்த கும்பல் வன்முறையில் ஈடுபட்டதால் ராணுவத்தினர் மற்றும் போலீசார் வரவழைக்கப்பட்டு நிலைமை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications