பாகிஸ்தானில் 6.0 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்.. கட்டிடங்கள் குலுங்கியதால் மக்கள் பீதி!

Subscribe to Oneindia Tamil

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் வடமேற்கு பகுதியில் இன்று 6.0 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.

இன்று ஆப்கானிஸ்தான் எல்லையை ஒட்டி, பாகி்ஸ்தானின் வடமேற்கு பகுதியில் உள்ள இந்து குஷ்மலை பகுதியை மையமாகக் கொண்டு 6.0 ரிக்டர் அளவில் 50 மீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக அந்நாட்டு வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நிலநடுக்கத்தின் விளைவாக கைபர்-பக்துன் கவா மாகாண தலைநகர் பெஷாலர் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகள் குலுங்கின. மன்ஷெக்ரா, சிட்ராச், பஜுர், மிங்கோரா மற்றும் மலகண்ட் ஆகிய மாவட்டங்களிலும் நிலநடுக்கம் உணரப்பட்டது.

இதனால் பீதி அடைந்த மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி தெருக்களில் தஞ்சமடைந்தனர். நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரங்கள் மற்றும் உயிரிழப்புகள் குறித்து விரிவான எந்த தகவலும் இதுவரை வெளியாகவில்லை.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+