அரசுமுறை பயணத்திற்கு நடுவே நடிகை பிரியங்கா சோப்ராவை சந்தித்த மோடி! சர்ச்சையாகும் வைரல் படம்
பெர்லின்: நாற்பது நாட்களாக டெல்லியில் போராடிய விவசாயிகளை சந்திக்க மறுத்த பிரதமர் மோடி, ஜெர்மனியில் அரசு முறை சுற்றுப் பயணமாக சென்றபோதிலும், அங்கு நடிகை பிரியங்கா சோப்ராவுடன் சந்தித்து பேசியுள்ளது ஆச்சரியம் ஏற்படுத்தியுள்ளது.
வர்த்தகம், முதலீடு மற்றும் பொருளாதார உறவுகளை மேம்படுத்தும் நோக்கில் பிரதமர் நரேந்திர மோடி, ரஷியா, பிரான்ஸ், ஜெர்மனி, ஸ்பெயின் ஆகிய நாடுகளில் 6 நாட்கள் அரசுமுறை சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார் என பிரதமர் அலுவலகம் அறிவித்துள்ளது.

ஆனால் ஜெர்மனியில் இன்று பிரியங்கா சோப்ராவுடன் பிரதமர் சந்தித்து பேசியுள்ளார். இதை மகிழ்ச்சியோடு பிரியங்கா சோப்ரா, தனது சமூக வலைத்தள பக்கங்களில் பகிர்ந்துள்ளார். யதேர்ச்சையாக சந்திக்க நேரம் கிடைத்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
டெல்லியில் தமிழக விவசாயிகள் நிர்வாண போராட்டம் வரை நடத்திப் பார்த்தும் மோடி அவர்களை சந்திக்கவில்லை. ஆனால் அரசுமுறை பயணத்தின்போது யதேர்ச்சையாக நடிகை பிரியங்கா சோப்ராவுடன் மட்டும் சந்திப்பு நடத்த அவருக்கு நேரம் கிடைத்துள்ளதே என ஆச்சரியப்படுகிறார்கள் மக்கள்.
நாடு முழுக்க மாட்டிறைச்சி தடை விவகாரம் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் மோடி இவ்வாறு அதைபப்பற்றி கருத்து கூறாமல் நடிகையோடு உரையாடிக்கொண்டிருந்தது விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது.
இது ஒருபக்க விமர்சனம் என்றால், பிரதமர் முன்னிலையில், கால் மேல் கால்போட்டு ஒரு பிரஜை அமர்வதா என்ற வாதமும் எழுந்துள்ளது. நடிகை காஜோல் டெல்லியில் பிரதமரை முன்பு ஒருமுறை சந்தித்தபோது இப்படி கால் மேல் கால்போட்டுதான் அமர்ந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications