For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஆஸ்திரேலியாவில் மோடி: வாட் எ பிரைட் சன்னி டே!

By Siva
Google Oneindia Tamil News

சிட்னி: பிரதமர் மோடி மியான்மரில் இருந்து ஆஸ்திரேலியாவில் உள்ள பிரிஸ்பேன் நகரை அடைந்துள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி மியான்மர், ஆஸ்திரேலியா, பிஜி தீவுகளில் 10 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்ள கடந்த 11ம் தேதி டெல்லியில் இருந்து தனிவிமானம் மூலம் மியான்மர் கிளம்பினார். மியான்மரில் ஆசியான் உச்சிமாநாடு, கிழக்கு ஆசிய மாநாட்டில் கலந்து கொண்டார். ஆசியான் உச்சி மாநாட்டில் மோடி அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமாவை சந்தித்து பேசினார்.

மோடி மலேசிய பிரதமர் நஜீப் ரசாக் உள்ளிட்ட பல்வேறு நாட்டு தலைவர்களையும் சந்தித்து பேசினார். அதன்பிறகு அவர் ஆஸ்திரேலியாவுக்கு கிளம்பினார். அவர் ஜி-20 மாநாடு நடக்கவிருக்கும் பிரிஸ்பேன் நகரை இன்று அடைந்துள்ளார்.

இது குறித்து மோடி ட்விட்டரில் தெரிவித்திருப்பதாவது,

பிரிஸ்பேனை அடைந்துவிட்டேன். வெளியே சூரியவெளிச்சம் பிரகாசமாக உள்ளது என்று தெரிவித்து நகரின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

மோடி ஆஸ்திரேலிய பிரதமர் டோனி அபாட்டை சந்தித்து இருநாட்டு உறவுகள் பற்றி பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். ஜி 20 மாநாட்டில் கருப்பு பண விவகாரத்திற்கு முக்கியத்துவம் அளித்து பேசப் போவதாக மோடி தெரிவித்துள்ளார்.

ராஜீவ் காந்தியை அடுத்து ஆஸ்திரேலியா வந்துள்ள முதல் இந்திய பிரதமர் மோடி என்பது குறிப்பிடத்தக்கது. ராஜீவ் காந்தி 1986ம் ஆண்டு ஆஸ்திரேலியா சென்றார்.

English summary
Prime Minister Narendra Modi on Friday arrived here in Australia on the second leg of his three-nation tour during which he will attend the annual G20 summit and hold bilateral talks with his Australian counterpart Tony Abbott.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X