உலகிலேயே மிக அதிகமான ஓட்டு வாங்கிய அரசு மோடியின் அரசு... மோடியை போனில் பாராட்டிய கேமரூன்!
லண்டன்: உலகில் வேறெந்த நாட்டுத் தலைவரும் பெறாத அளவிற்கு அதிக ஓட்டுக்களைப் பெற்று மத்தியில் ஆட்சி அமைத்துள்ளதாக மோடி தலைமையிலான பாஜக அரசை இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன் பாராட்டியுள்ளார் .
இங்கிலாந்தில் இந்திய கழகத்தின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள விழாவில் கலந்து கொள்வதற்காக நேற்று போனில் தொடர்பு கொண்டு இந்தியப் பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுத்தார் இங்கிலாந்து பிரதமர் கேமரூன்.
அப்போது அவர் பேசியதாவது:-

மகிழ்ச்சி...
உலகில் வேறெந்த நாட்டுத் தலைவரும் பெறாத அளவிற்கு அதிக ஓட்டுக்களைப் பெற்று இந்தியாவில் நீங்கள் (பாஜக) ஆட்சி அமைத்துள்ளீர்கள். உங்களுடன் பேசுவது எனக்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது.

முன்னேற்றப் பாதை...
பிரிட்டன் மற்றும் இந்தியா இரண்டும் இப்போது சீர்திருத்த அரசாங்கங்களைப் பெற்றுள்ளது. மேலும், முன்னேற்றப் பாதையில் சென்று வருகிறது.

இதயத்தின் வெற்றி...
நடந்து முடிந்த தேர்தலில் நீங்கள் வாக்காளர்களின் இதயத்தில் இடம் பிடித்ததன் மூலம் வெற்றி பெற்றிருக்கிறீர்கள்' என அவர் பாராட்டினார்.

மகாத்மா காந்தி...
மேலும், அவர் தன் பேச்சினூடே மகாத்மா காந்தியின் வார்த்தைகளை நினைவு கூர்ந்தார். அதாவது இந்தியாவின் தேசப்பிதா மகாத்மா காந்தி கூறியது போல், ‘மற்றவர்களுக்கான சேவையில் ஈடுபடும் போது தான் நம்மைப் பற்றி நாமே புரிந்து கொள்ள இயலும்' என அவர் தெரிவித்தார்.

3 காரணிகள்...
அதேபோல், இந்தியா- இங்கிலாந்து நாடுகளுக்கிடையேயான உறவு மிகவும் வலுவானதாக உள்ளதாக கூறிய கேமரூன், தொடர்ந்து இந்த உறவு இப்படியே நீடிக்க இருநாடுகளுக்கிடையே அர்ப்பணிப்பு, மரியாதை மற்றும் இலட்சியம் போன்றவை இருக்கவேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications