பதவியேற்கும் முன்பு.. ஈரானின் புதிய சுப்ரீம் லீடரையும் தீர்த்து கட்டிய இஸ்ரேல்! பெரிய ட்விஸ்ட்
தெஹ்ரான்: ஈரானின் உச்ச தலைவராக இருந்த கமேனி கடந்த சனிக்கிழமை அமெரிக்கா- இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் கொல்லப்பட்டார். இதையடுத்து அவரது மகன் மொஜ்தபா கமேனி ஈரானின் அடுத்த சுப்ரீம் லீடராக தேர்வு செய்யப்படலாம் எனச் சொல்லப்பட்டது. இருப்பினும், மொஜ்தபா கமேனி இப்போது உயிருடன் இருக்கிறாரா.. இல்லை அவரும் உயிரிழந்துவிட்டரா என்று பகீர் கேள்வி எழுந்துள்ளது
கடந்த சனிக்கிழமை அதாவது பிப்ரவரி 28ம் தேதி இந்த தாக்குதல் தொடங்கியது. முதல் நாளே ஈரானின் சுப்ரீம் லீடர் அயதுல்லா அலி கமேனி உட்படப் பல மூத்த அதிகாரிகள் கொல்லப்பட்டனர். கமேனி முக்கியமான மீட்டிங் ஒன்றை நடத்தவிருந்ததாகவும் அப்போது நடந்த ஏவுகணை தாக்குதலில் கமேனி கொல்லப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகின.

மத்திய கிழக்கு
இது ஈரானுக்கு மிகப் பெரிய கொந்தளிப்பை ஏற்படுத்தியது. உடனடியாக ஈரான் கடும் பதிலடி தந்தது. இஸ்ரேல் மீது ஈரான் நேரடியாகத் தாக்குதல்களை நடத்தி வருகிறது. அதேபோல மறுபுறம் மத்திய கிழக்கில் உள்ள பிற அமெரிக்க ராணுவ முகாம்களைக் குறிவைத்தும் ஈரான் தாக்குதல்களை நடத்தி வருகிறது. இதனால் மத்திய கிழக்கில் ஒரு பிராந்திய போர் வெடிக்கும் ஆபத்து உருவாகியுள்ளது.
ஈரான் மற்றும் இஸ்ரேல்- அமெரிக்கா இடையேயான போர் ஒரு வாரத்திற்கும் மேலாகத் தொடர்கிறது. இதில் ஈரானில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளும் இழப்புகளும் அதிகரித்து வருகின்றன. வன்முறை தொடங்கியதிலிருந்து சுமார் 1,300-க்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டதாகச் சர்வதேச ஊடகமான அல் ஜசீரா தெரிவித்துள்ளது. இந்தச் சூழலில், ஈரானின் அடுத்த சுப்ரீம் லீடராக தேர்வு செய்யப்படுவார் எனச் சொல்லப்பட்ட மொஜ்தபா கமேனியின் இருப்பிடம் தற்போது மர்மமாக உள்ளது.
மொஜ்தபா கமேனி
அலி கமேனியின் மறைவை அடுத்து, 56 வயதான அவரது இரண்டாவது மகன் மொஜ்தபா, ஈரானின் அடுத்த சுப்ரீம் லீடராக தேர்வாக வாய்ப்பு இருப்பதாகச் சொல்லப்பட்டது. ஈரான் ஊடகங்களிலும் இது தொடர்பான செய்திகள் வெளியானது. சில நாட்களில் மொஜ்தபா சுப்ரீம் லீடராக தேர்வு செய்யப்படுவார் எனச் சொல்லப்பட்டது. இருப்பினும், அவர் பொதுவெளியில் தோன்றவில்லை. அவரது தேர்வு குறித்து அதிகாரப்பூர்வ அறிக்கையைக் கூட வெளியாகவில்லை. ஈரான் அரசும் தொலைக்காட்சி மற்றும் ஈரான் அரசு தரப்பு இதில் மவுனம் சாதித்தே வருகிறது.
இதனால் கமேனியின் மகன் மொஜ்தபா கமேனி உயிருடன் தான் இருக்கிறாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஏற்கனவே இந்த காலகட்டத்தில், ஈரானின் அடுத்த சுப்ரீம் லீடராக யார் நியமிக்கப்பட்டாலும், அவர்களை இஸ்ரேல் தனது டார்கெட்டாகவே கருதும் என இஸ்ரேல் அரசு எச்சரிக்கையை விடுத்துள்ளது. இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் இந்த எச்சரிக்கையைப் பகிரங்கமாக வெளியிட்டார்.
இஸ்ரேல் திட்டவட்டம்
இது தொடர்பாக காட்ஸ் தனது அறிக்கையில், "இஸ்ரேலை அழிக்கவும், உலக நாடுகளை அச்சுறுத்தவும், ஈரான் மக்களை ஒடுக்கவும் தொடர்ந்து திட்டமிடும் ஈரான் பயங்கரவாத ஆட்சியால் நியமிக்கப்படும் ஒவ்வொரு தலைவரும் அழிக்கப்படுவதற்கான தெளிவான டார்கெட்டாக இருப்பார். அவரது பெயர் என்ன அல்லது அவர் எங்கு மறைந்திருக்கிறார் என்பது முக்கியமில்லை. அவர் அழிக்கப்பட வேண்டும் என்பதே முக்கியம். இதுதான் இந்த ஆபரேஷனின் நோக்கம். இந்த மிஷனை முழுமையாகச் செய்து முடிக்க இஸ்ரேல் படைகளுக்கு உத்தரவிட்டுள்ளோம். அமெரிக்காவுடன் இணைந்து இதற்கான நடவடிக்கை எடுப்போம்" என்றார்.
கமேனி நிலை என்ன
மொஜ்தபாவின் உடல்நலம் குறித்து இதுவரை எந்த அதிகாரப்பூர்வ தகவலும் வெளியாகவில்லை. அவர் எங்கே இருக்கிறார்.. உயிருடாவது இருக்கிறாரா என்பது தொடர்பாக எந்தவொரு தகவலும் இல்லை. இருப்பினும், தந்தை கொல்லப்பட்ட அதே தாக்குதலில் மொஜ்தபா கமேனி அங்கு தான் இருந்தார் என்றும் அந்த தாக்குதலில் மொஜ்தபா நூலிழையில் உயிர் தப்பியதாகவும் ஈரான் ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும், அதில் மொஜ்தபாவின் மனைவி சஹ்ரா ஹத்தாத்-அடல் மற்றும் மகனும் உயிரிழந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
-
Kuwait மீது திடீர் தாக்குதல் நடத்திய ஈரான்.. திரும்பும் பக்கமெல்லாம் ஏவுகணை சந்தம்.. பீதியில் மக்கள்! -
கிரிப்டோகரன்சிக்கு மொத்தமாக வேட்டு வைத்த அமெரிக்கா.. நினைத்துகூட பார்க்காத அடி.. கலங்கி நிற்கும் ஈரான்! -
மொத்த இந்தியாவுக்கும் குட்நியூஸ்.. கச்சா எண்ணெய் விலை பெரும் சரிவு.. அப்போ பெட்ரோல், டீசல் விலை குறையுமா? -
போங்க தம்பி.. டிரம்ப்-க்கு மீண்டும் பல்பு கொடுத்த ஈரான்.. அடுத்தது என்ன நடக்கும்? -
ஈரானுடன் போர் நிறுத்தம்.. 14 பாயிண்ட்களை அடுக்கிய அமெரிக்கா! கையெழுத்து போடுவாரா டிரம்ப்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications