மன வளர்ச்சி இல்லாத குழந்தையை ஃபிரிட்ஜுக்குள் அடைத்துக் கொன்ற தாய்...!

Subscribe to Oneindia Tamil

fridge
ஹூஸ்டன்: அமெரிக்காவின் ஹூஸ்டனைச் சேர்ந்த 9 வயது சிறுமியின் இறந்த உடல் அவரது வீட்டின் ரெப்ரிஜிரிட்டேரில் இருந்து மீட்கப்பட்டது. இதுதொடர்பாக அந்த சிறுமியின் தாயாரைப் போலீஸார் கைது செய்துள்ளனர்.

அந்தப் பெண்ணின் பெயர் ஆம்பர் கேயெஸ். இவர் மீது தனது மகளைப் படுகாயப்படுத்தி கொலை செய்ததாக புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆம்பரின் 9 வயது மகளான ஆயஹ்னா கோம்ப்,அவரது வீட்டின் ஃபிரிட்ஜில் அடைத்து வைக்கப்பட்டதைப் போலீஸார் கண்டுபிடித்து உடலை மீட்டனர்.

கடந்த ஜூன் மாதம் ஆம்பர் வீட்டுக்கு வந்த அண்டை வீட்டு சிறார் சாப்பிட ஏதாவது இருக்கிறதா என்பதைப் பார்ப்பதற்காக ஃபிரிட்ஜைத் திறந்தபோது உள்ளே கோம்ப்பின் உடல் இருப்பதைப் பார்த்து அதிர்ந்தனர். பின்னர் தகவல் போலீஸாருக்குச் சென்று அவர்கள் விரைந்து வந்தனர்.

சிறுமி கோம்ப், செரிபரல் பால்சி என்ற மன வளர்ச்சி இல்லாத குழந்தை ஆவார். மேலும் அவருக்கு சரியாக சாப்பாடு கூட தராமல் இருந்துள்ளார் ஆம்பர். மிகவும் வேண்டா வெறுப்பாக சித்திரவதை செய்து தனது மகளை வளர்த்து வந்ததும் தெரிய வந்துள்ளது.

விசாரணையின்போது ஆம்பர் கூறுகையில், கடந்த ஜனவரி 29ம் தேதி எனது மகள் எழுந்திருக்கவில்லை. பலமுறை எழுப்பிப் பார்த்தும் அவள் எழுந்திருக்கவில்லை. இதையடுத்து ஒரு துணியில் சுற்றி ஃபிரிட்ஜுக்குள் வைத்து விட்டேன் என்று கூறியுள்ளார்.

கொடுமை....!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+