கேன்சருடன் போராடி வென்று மகனை காத்து உமரின் தோட்டாக்களுக்கு பலியான தாய்
ஆர்லான்டோ: ஆர்லான்டோவில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் தனது மகனை காத்து ஒரு தாய் பலியாகியுள்ளார்.
அமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ள ப்ரூக்லினில் பிறந்தவர் பிரென்டா லீ மார்க்கெஸ் மெக்கூல்(49). 11 குழந்தைகளின் தாயான அவருக்கு சால்சா நடனமாட பிடிக்கும். அவரின் மகன் இசையா ஹென்டர்சன்(21) ஒரு ஓரினச்சேர்க்கையாளர்.

நியூயார்க், கலிபோர்னியாவில் வசித்து வந்த பிரென்டா தனது பிள்ளைகளுடன் சேர்ந்து இருக்க அண்மையில் ஆர்லான்டோ நகரில் குடியேறினார். பிரென்டா இசையாவுடன் சேர்ந்து ஆர்லான்டோவில் இருக்கும் பல்ஸ் ஓரினச்சேர்க்கையாளர் கிளப்புக்கு அடிக்கடி செல்வார்.
அங்கு அவர் தனது மகனுடன் நடனம் ஆடுவார். கடந்த சனிக்கிழமை இரவும் அவர் இசையாவுடன் பல்ஸ் கிளப்புக்கு சென்றபோது உமர் மாட்டீன் துப்பாக்கியுடன் அங்கு வந்ததை பார்த்தார். உடனே தனது மகனை தரையில் படுக்குமாறு கூறிவிட்டு அவரின் உயிரை காத்து உமரின் தோட்டாக்களுக்கு தனது உயிரை இழந்தார்.
உமர் சுட்டதில் பிரென்டா மீது இரண்டு தோட்டாக்கள் பாய்ந்து அவர் பலியானார். இசையாவை போலீசார் பத்திரமாக மீட்டனர். இரண்டு வகையான புற்றுநோயுடன் போராடி வென்ற பிரென்டாவை பறிகொடுத்த இசையா சோகத்தில் ஆழ்ந்துள்ளார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications