"இந்தியா - பாரத்" பெயர் சர்ச்சைக்கு நடுவே.. சீனா கொடுத்து இருக்கும் அட்வைஸ்.. என்னன்னு பாருங்க
பீஜிங்: இந்தியாவின் பெயரை பாரத் என மாற்றம் செய்ய வேண்டும் என்று பாஜக மற்றும் அதன் ஆதரவாளர்கள் வலியுறுத்தி வரும் நிலையில், இந்தியாவில் நடைபெற இருக்கும் ஜி 20 மாநாடு பற்றி கருத்து தெரிவித்து இருக்கும் சீனா, இந்தியாவின் பெயர் விவகாரம் குறித்தும் பேசியுள்ளது.
அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், பாஜகவை வீழ்த்தும் முனைப்பில் காங்கிரஸ், திமுக உள்பட 26 கட்சிகள் இணைந்து ‛இந்தியா' என்ற பெயரில் கூட்டணியை உருவாக்கி உள்ளன. நாட்டின் பெயரை குறிப்பிடும் வகையில் ‛இந்தியா' என எதிர்க்கட்சிகள் தங்கள் கூட்டணிக்கு பெயர் வைத்துள்ளது. இந்த நிலையில், வரும் 9 மற்றும் 10 ஆகிய தேதிகளில் தலைநகர் டெல்லியில் ஜி20 மாநாடு நடைபெற உள்ளது.

இதில் பங்கேற்கும் விருந்தினர்களுக்கு ஜனாதிபதி திரெளபதி முர்மு டின்னர் விருந்து வழங்க உள்ளார். இதற்கான அழைப்பிதழ் தற்போது வெளியாகி உள்ளது. அதில் President of India என்பதற்கு பதில் President of Bharat என அச்சிடப்பட்டுள்ளது. இது இந்தியாவின் பெயரை பாரத் என மாற்ற மத்திய அரசு மேற்கொள்ளும் முயற்சியின் முதல் நடவடிக்கை என கூறப்படுகிறது. அதாவது எதிர்க்கட்சிகள் ‛இந்தியா' என தங்களின் கூட்டணிக்கு பெயர் சூட்டியுள்ளன.
சிறப்பு நாடாளுமன்ற கூட்டம்: இதனால் இந்தியா என பிரதமர் மோடி பேசினால் அது ‛இந்தியா' கூட்டணியை குறிக்கவும் வாய்ப்புள்ளது. இந்தியாவின் பெயரை 'பாரத்' என மாற்ற மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் பரவி வருகின்றன. அதன்படி தான் ஜனாதிபதியின் அழைப்பிதழில் President of Bharat என இருப்பதாக தகவல்கள் பரவி வருகிறது. மேலும் இந்தியாவின் பெயரை பாரத் என மாற்றம் செய்வதற்கான சட்டத்திருத்த மசோதாவை மத்திய பாஜக அரசு வரும் 18ம் தேதி தொடங்கும் சிறப்பு நாடாளுமன்ற கூட்டத்தில் தாக்கல் செய்யலாம் என கூறப்படுகிறது.
சீனா கருத்து: கடந்த நாடாளுமன்ற கூட்டத்தொடரிலும் கூட பாஜக எம்.பி நரேஷ் பன்சால், இந்தியா என்பது காலனித்துவ அடிமைத்தனத்தின் குறியீடு. எனவே அந்த பெயரை அரசியல் அமைப்பில் இருந்து நீக்க வேண்டும்" என்றார். இந்தியா- பாரத் பெயர் சர்ச்சைக்கு மத்தியில் ஜி 20 மாநாட்டுக்கும் இந்தியா முழு வீச்சில் தயராகி வருகிறது. இந்த நிலையில், இது குறித்து கருத்து தெரிவித்துள்ள சீனா, ஜி 20 மாநாட்டை நடத்தும் வாய்ப்பை பெற்றிருக்கும் இந்தியா, சர்வதேச அளவில் தனது செல்வாக்கை அதிகரித்து கொள்வதற்கான வாய்பாக இதைனை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளது.
பொருளாதார சீர்திருத்தம்: மேலும், இந்தியா தனது பெயரை மாற்றுவதை விட, முக்கியமான பல விஷயங்களில் கவனம் செலுத்தலாம் எனவும் அட்வைஸ் செய்துள்ளது. சீன நாளிதழான குளோபல் டைம்ஸில் இந்த செய்தி குறிப்பிடப்பட்டுள்ளது. பொருளாத சீர்திருத்தம் அவசியம் என்றும் இந்தியாவை வலியுறுத்திய சீனா, சுதந்திரம் அடைந்த பிறகு புரட்சிகரமான சீர்திருத்தங்கள் இன்றி புரட்சிகரமான வளர்ச்சியை இந்தியாவால் சாதிக்க முடியாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications