மாஸ்கோ: தவறி கீழே விழுந்ததில் டிரைவர் பலி... ஆளில்லாமல் ஓடிய மெட்ரோ ரயில்
மாஸ்கோ: மெட்ரோ ரயிலை இயக்கிக் கொண்டிருக்கும் போதே, கீழே விழுந்து டிரைவர் பரிதாபமாக பலியான சம்பவத்தால், டிரைவரின் கட்டுப்பாடு இல்லாமல் ஓடிய மெட்ரோ ரயிலால் மாஸ்கோவில் பரபரப்பு ஏற்பட்டது.
டிரைவரில்லாமல் ஓடும் வாகனங்களை மர்மப் படங்களில் பார்த்திருப்பீர்கள். அது போன்ற சம்பவம் ஒன்று மாஸ்கோவில் நடந்துள்ளது.
டிரைவரில்லாமல் ஓடிய மெட்ரோ ரயிலால் அப்பகுதியில் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது. அதிகாரிகளின் துரித நடவடிக்கையால் நடக்கவிருந்த பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

டிரைவர் எங்கே..?
ரஷ்யாவின் தெற்கு மாஸ்கோ நகரில் இருந்து ரியாசன்ஸ்கி புராஸ்பெக்ட் ரெயில் நிலையம் நோக்கி புறப்பட்ட அதிவேக மெட்ரோ ரயிலில் டிரைவர் இல்லாததை எதேச்சையாக கவனித்தார் எதிர்ப்புறம் வந்த ரயிலின் ஓட்டுநர்.

குகை பாதையில் சடலம்...
அதிர்ச்சி விலகுவதற்கு முன், ரியாசன்ஸ்கி புராஸ்பெக்ட் மற்றும் குச்மின்கி ரெயில் நிலையங்களுக்கு இடையில் உள்ள குகை பாதையில் எதிரே சென்ற ரெயிலின் டிரைவர் தண்டவாளத்தில் அடிபட்டு இறந்து கிடப்பதையும் கவனித்தார்.

தகவல்....
உடனடியாக, இதுதொடர்பாக ரெயில்வே கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் அளித்தார் அந்த மற்றொரு ரயிலின் டிரைவர்.

ஆட்டோமேட்டிக் பிரேக் சிஸ்டம்...
அதனைத் தொடர்ந்து, துரித கதியில் நடவடிக்கை எடுத்த அதிகாரிகள் டிரைவர் இல்லாமல் சென்ற ரயிலை 'ஆட்டோமேட்டிக் பிரேக் சிஸ்டம்' மூலம் ரியான்ஸ்கி புராஸ்பெக்ட் நிலையத்தில் நிறுத்தினர்.

விபத்தா? சதியா?
ஓடிக்கொண்டிருந்த ரயிலில் இருந்து டிரைவர் கீழே விழுந்து இறந்ததின் பிண்ணனி விபத்தா அல்லது சதி செயல் காரணமா என்பது குறித்து அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அஜாக்கிரதை ஏன்?
டிரைவர் பகுதி கதவு திறந்திருந்த காரணத்தால், ஓட்டிக் கொண்டிருக்கும் ரெயிலில் இருந்து கீழே விழும் அளவிற்கு அந்த டிரைவர் அஜாக்கிரதையாக இருந்தது ஏன்? என்ற கோணத்திலும் ரயில்வே அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications