"இது தான் கடைசி வார்னிங்!" நிலைமை மோசமாகிவிடும்.. உக்ரைனுக்கு பகிரங்க எச்சரிக்கை விடுத்த ரஷ்யா
கீவ்: உக்ரைன் போர் ஒரு மாதத்திற்கு மேலாகத் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், உக்ரைன் நாட்டிற்கு ரஷ்யா புதிய எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது.
உக்ரைன் மீது கடந்த பிப். இறுதியில் முழு வீச்சில் போரை ஆரம்பிக்க ரஷ்ய அதிபர் புதின் உத்தரவிட்டார். அதன்படி உக்ரைன் நாட்டின் பல முக்கிய நகரங்களைக் குறி வைத்து ரஷ்யா தாக்குதல் நடத்தியது.
இந்தப் போர் ஒரு மாதத்திற்கு மேலாகத் தொடர்ந்து தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த போர் காரணமாக உக்ரைன் மக்கள் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.

உக்ரைன் போர்
உக்ரைன் போர் தொடங்கிய முதல் சில நாட்கள் ரஷ்யா ராணுவம் ஆதிக்கம் செலுத்தியது. இருப்பினும், அடுத்து சில நாட்களிலேயே உக்ரைன் நாட்டில் ரஷ்யாவால் எதிர்பார்த்த அளவுக்கு வேகமாக முன்னேற முடியவில்லை. பல பகுதிகளில் உக்ரைன் ராணுவம் தக்க பதிலடியைக் கொடுக்க தொடங்கினர். உக்ரைன் இந்த அளவுக்குத் துணிச்சலாகப் போராடும் என்று ரஷ்யா துளியும் எதிர்பார்க்கவில்லை. பல பகுதிகளில் ரஷ்ய ராணுவம் முன்னேற முடியாமல் ஸ்தம்பித்துப் போய்விட்டது.

அமைதி பேச்சுவார்த்தை
போர் தொடங்கிய சில நாட்களிலேயே இரு தரப்பிற்கும் இடையே அமைதி பேச்சுவார்த்தையும் தொடங்கியது. இரு தரப்பிற்கும் இடையே நடைபெற்ற முதற்கட்ட அமைதி பேச்சுவார்த்தையில் பெரியளவில் உடன்பாடு ஏற்படவில்லை. அதேநேரம் கடந்த சில வாரங்களுக்கு முன்பு, துருக்கியில் நடைபெற்ற அமைதிப் பேச்சுவார்த்தையில் இரு தரப்பினருக்கும் இடையே உடன்பாடு ஏற்பட்டது. இதையடுத்து போர் விரைவில் முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்பட்டது.

நிலைமை மோசம்
அதன்படி உக்ரைன் தலைநகர் கீவ் அருகே இருந்த ரஷ்யப் படைகள் வெளியேறின. இதனால் போர் விரைவில் முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்பட்டது. இருப்பினும், அவ்வளவு சீக்கிரம் இந்தப் போர் முடிவுக்கு வருவதாக இல்லை. ரஷ்யா ராணுவத்தைக் குறி வைத்தும், ரஷ்ய எல்லைக்குள் சென்றும் உக்ரைன் தாக்குதல் நடத்தி வருவதாகச் செய்திகள் வெளியாகி வந்தன. இதுபோன்ற தகவல்கள் நிலைமையை மேலும் மோசமாக்கும் வகையிலேயே அமைந்துள்ளது.

புதிய எச்சரிக்கை
இந்நிலையில், ரஷ்யாவில் உக்ரைன் தாக்குதல் நடத்தினால், கீவ் நகரில் உள்ள கண்ட்ரோல் சென்டர்ஸை (command centres) குறி வைத்துத் தாக்குதலைத் தொடங்குவோம் என்று ரஷ்ய ராணுவம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், "உக்ரைன் ராணுவம் நாச வேலைகளில் ஈடுபடவும், ரஷ்ய எல்லைக்குள் புகுந்து தாக்குதல் நடத்தவும் முயல்கிறது. இது போன்ற தாக்குதல்கள் தொடர்ந்தால், ரஷ்ய ராணுவம் கீவ் கமேண்டோ மையங்களில் தாக்குதல் நடத்தும்" என்று அதில் கூறப்பட்டுள்ளது.
Recommended Video

ரஷ்ய ராணுவம்
உக்ரைன் தலைநகர் கீவ்வை கைப்பற்ற ரஷ்யா பல வாரக் காலமாகத் தீவிரமாக முயன்று வந்தது. இருப்பினும், அதில் பெரியளவில் பலன் இல்லை. இதன் காரணமாக இப்போது கீவ் நகரில் இருக்கும் ராணுவத்தை ரஷ்யா வாபஸ் பெற்றுள்ளது. அதற்கு பதிலாகக் கிழக்கு உக்ரைன் பகுதிகளைக் கைப்பற்றுவதில் ரஷ்யா ஆர்வம் காட்டி வருகிறது. அதன்படி உக்ரைன் நாட்டில் முக்கிய துறைமுகமான மரியுபோல் இப்போது முழுக்க முழுக்க ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் வந்துள்ளது.












Click it and Unblock the Notifications