பேச்சுவார்த்தையை விரும்பும் இஸ்ரேல்! கத்தாருக்கு பறந்த மொசாட் முக்கிய புள்ளி! போர் முடிவுக்கு வருமா?
தோஹா: காசா மீது 25வது நாளாக இன்றும் இஸ்ரேல் படைகள் தாக்குதலை நடத்தி வரும் நிலையில் தற்போது, ஹமாஸ் வசம் இருக்கும் பிணை கைதிகளை மீட்க இஸ்ரேல் உளவுத்துறையான மொசாட்டின் இயக்குநர் கத்தாருக்கு சென்றிருக்கிறார். தற்போது வரை ஹமாஸுக்கும், இஸ்ரேலுக்கும் இடையே கத்தார்தான் பேச்சுவார்த்தை செய்து வருகிறது.
இஸ்ரேலுகும், ஹமாஸ் படையினருக்கும் இடையே அடிக்கடி மோதல் எழுவது இயல்பானதுதான். இப்படி இருக்கையில் 2011க்கு பின்னர் எந்த மோதல் போக்கும் எழவில்லை. ஆனால் கடந்த 7ம் தேதி யாரும் எதிர்பாராத விதமாக ஹமாஸ் படையினர் காசாவிலிருந்து இஸ்ரேல் மீது ராக்கெட்களை வீசி தாக்குதல் நடத்தினர். இஸ்ரேலுக்கு இப்படியான அச்சுறுத்தல் இருப்பது ஏற்கெனவே தெரியும். எனவே அது தனது பாதுகாப்புக்காக 'அயன் டோம்' அமைப்பை உருவாக்கி வைத்திருந்தது. சோகம் என்னவெனில் இந்த வலுவான தடுப்பையும் மீறி ஹமாஸ் ஏவிய ராக்கெட்கள் இஸ்ரேலுக்குள் பாய்ந்தது. இதில் 1,400 பேர் கொல்லப்பட்டனர்.

இதற்கான பதில் தாக்குதலை இஸ்ரேல் பாதுகாப்புப்படை தொடங்கியுள்ளது. ஹமாஸை அழிப்பதாக கூறி கடந்த 24 நாட்களாக இஸ்ரேல் விமானப்படை கடுமையான தாக்குதலை தொடுத்து வந்தது. 25வது நாளாக இன்றும் இது நீடிக்கிறது. இந்த கொடூர தாக்குதலில் 8,306 பாலஸ்தீன மக்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். கடந்த 26ம் தேதி வரை வான் வழி தாக்குதலில் ஈடுபட்டிருந்த இஸ்ரேல் அதன் பின்னர் தரைவழி ஊடுருவலை தொடங்கியது. போர் தீவிரமடைந்த நிலையில் சமாதான பேச்சுவார்த்தை தொடங்க வேண்டும் என உலக நாடுகள் வலியுறுத்தின.
போதாக்குறைக்கு அமெரிக்காவை சேர்ந்தவர்கள் சிலரை ஹமாஸ் பிணை கைதிகளாக பிடித்து சென்றிருப்பதால் அதை மீட்க வேண்டும் என்பதில் அந்நாடு குறியாக இருக்கிறது. ஆனால் போரை நிறுத்த ஐநாவில் முன்வைக்கப்பட்ட தீர்மானத்திற்கு அமெரிக்கா ஆதரிக்கவில்லை. இப்படி இருக்கையில், கத்தாரை வைத்து அமெரிக்காவும், இஸ்ரேலும் ஹமாஸிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றன. சில பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து 5 பேரை ஹமாஸ் விடுவித்தது.
ஆனால் அடுத்தடுத்த பேச்சுவார்த்தையில், இஸ்ரேல் சிறையில் உள்ள 6000 பாலஸ்தீனர்கள் விடுவிக்கப்பட வேண்டும் என ஹமாஸ் வலியுறுத்தியுள்ளது. இதற்கு இஸ்ரேல் உடன்பட மறுத்து தரைவழி தாக்குதலை தொடங்கியிருக்கிறது. அதேபோல, ஹமாஸின் வலியுறுத்தல், உளவியல் போர் என்றும் தெரிவித்துள்ளது. இப்படி இஸ்ரேல் தீவிர தாக்குதலை தொடங்க, நேற்று இஸ்ரேலிய பிணை கைதிகள் மூவர் பேசிய வீடியோ ஒன்று வெளியானது. அதில், பிரதமர் நெதன்யாகு தங்களை மீட்க வேண்டும். அதற்காக பாலஸ்தீன கைதிகளை விடுவிக்க வேண்டும் என்று கூறியுள்ளனர். அதேபோல இவர்களின் உறவினர்கள் நெதன்யாகுவை சந்தித்து, ஹமாஸ் வசம் சிக்கியுள்ளவர்களை மீட்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர். இது இஸ்ரேலை நெருக்கடி நிலைக்கு தள்ளியிருக்கிறது.
இந்த நிலையை சமாளிக்கதான் இஸ்ரேலின் மொசாட் இயக்குநர் டேவிட் பார்னியா, தற்போது கத்தாருக்கு பயணித்திருக்கிறார். இந்த பயணம், பேச்சுவார்த்தை மூலமாகவே இஸ்ரேல் பிரச்னையை தீர்க்க நினைக்கிறது என்பதை காட்டுவதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர். ஆனால் இது குறித்து கருத்து தெரிவிக்க இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் மறுத்துவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications