8 குழந்தைகளை கொடூரமாக கொலை செய்த ஆஸ்திரேலிய தாய் கைது!
சிட்னி: ஆஸ்திரேலியாவில் பெற்ற 7 குழந்தைகளையும், சகோதரரின் குழந்தை ஒருவரையும் கத்தியால் குத்தி கொலை செய்த தாய் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
குயின்ஸ்லாந்து மாகாணத்தில் மனூரா நகரின் புறநகரான கெய்ன்ஸ் நகரில் ஒரு வீட்டில் பெண் ஒருவர் கத்திக்குத்து காயங்களுடன் கிடப்பதாக உள்ளூர் போலீசுக்கு தகவல் கிடைத்தது.
உடனே போலீசார் அங்கு விரைந்து சென்றனர். அங்கு அந்த பெண் கத்திக்குத்து காயங்களுடன் கிடந்தது மட்டுமின்றி, 8 குழந்தைகள் பிணங்களாக கிடந்தது கண்டு கடும் அதிர்ச்சி அடைந்தனர்.
இந்த குழந்தைகள் ஒன்றரை வயது முதல் 15 வயது வரையிலானவர்கள். அவர்களில் பலரும் கத்தியால் குத்தப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. அவர்களின் உடல்களை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
கத்திக்குத்து காயங்களுடன் கிடந்த சுமார் 35 வயதான பெண்ணை போலீசார் மீட்டு, சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்த்தனர். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. அவரிடம் போலீசார் விசாரணை நடத்துகின்றனர். விசாரணைக்கு அவர் ஒத்துழைப்பதாக தகவல்கள் கூறுகின்றன.
விசாரணையில் கத்தி குத்து காயங்களுடன் கிடந்த பெண் பெயர் மெர்சானி வாரியா என்றும் அவர் தான் தனது 7 குழந்தைகளையும், தனது சகோதரருடைய ஒரு குழந்தையையும் கத்தியால் குத்தி கொலை செய்து உள்ளது தெரிய வந்தது.இதை தொடர்ந்து போலீசார் அந்த பெண்ணை கைது செய்தனர்.
-
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா












Click it and Unblock the Notifications